டெல்லி: இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். தற்போது 7ஆவது சம்பள கமிஷன் பரிந்துரையின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
சம்பள கமிஷன்: 7ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் இந்த ஆண்டுடன் காலாவதியாகின்றன. 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் அரசு சம்பளம் வழங்க வேண்டும். மத்திய அரசினை பொறுத்தவரை 8ஆவது சம்பள கமிஷனுக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு இருக்கிறது தவிர அதற்கான உறுப்பினர்களை நியமனம் செய்வது , குறிப்புரைகளை வரையறுப்பது என்பன உள்ளிட்ட எந்த பணிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

மத்திய அரசு பதில்: மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைகளை தாமதப்படுத்தக் கூடாது , அதனை விரைவு படுத்த வேண்டும் என அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களுக்கான கூட்டமைப்பும் தொடர்ச்சியாக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான முக்கியமான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது .மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பாக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
அமைச்சகங்களிடம் ஆலோசனை: குறிப்பாக உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், எட்டாவது சம்பள கமிஷனுக்கான டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ் எனப்படும் குறிப்புரைகளை இறுதி செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்ட வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பள கமிஷன்: இந்த டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ் இறுதி செய்யப்பட்ட பின்னர் மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்றும் இதனை அடுத்து சம்பள கமிஷனுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். அடுத்தடுத்த பணிகள் விரைவாக நடைபெறும் என உறுதி தந்திருக்கும் அமைச்சர் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்திற்குள் சம்பள கமிஷன் தன்னுடைய ஆய்வு பணிகளை முடித்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் .
தாமதமாகுமா சம்பள உயர்வு?: பொதுவாக சம்பள கமிஷன் அமைக்கப்பட்டால் அவர்கள் ஆய்வு நடத்தி அனைவரின் கருத்தையும் கேட்டு விலைவாசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து சம்பள உயர்வு பரிந்துரை வழங்குவதற்கு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும். இந்த சூழலில் எட்டாவது சம்பள கமிஷன் அமைத்து அவர்கள் சம்பள பரிந்துரை செய்து அது நடைமுறைக்கு வருவது தாமதமாகும் என்றே சொல்லப்படுகிறது. அப்படியே தாமதமானாலும் ஊழியர்களுக்கான சம்பளம் என்பது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications