டெல்லி: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தான் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 8ஆவது சம்பள கமிஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கி அந்த பரிந்துரைகளை அரசு ஏற்று புதிய சம்பளம் நடைமுறைக்கு வந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு கிடைக்க கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என சொல்லப்படுகிறது . இந்த சூழலில் தான் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு தான் மத்திய அரசு தற்போது பதில் அளித்திருக்கிறது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது . இதனை அடுத்து 10 ஆண்டு காலத்திற்கும் ஆண்டுக்கு இரண்டு முறை பண வீக்கத்தின் அடிப்படையில் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் என்பது அகவிலை படியாக வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகை அகவிலை படியாக கிடைக்கிறது.
அதாவது 1 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளம் என்றால் அதில் 58 சதவீதம் அதாவது 58,000 ரூபாய் அகவிலைப்படியாக கிடைக்கும். இதோடு வீட்டுவாடகை அலோவென்ஸ் என்பன உள்ளிட்டவை சேர்த்து சுமார் 1.8 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே 50 சதவீதம் அகவிலைப்படி என்ற நிலையை அடைந்து விட்டது. இந்த நிலையில் தான் பல்வேறு தொழிலாளர் யூனியன்களும் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
தற்போது எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதால் மீண்டும் தங்களுடைய கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் மத்திய நிதி அமைச்சகம் தற்போதைக்கு அடிப்படை சம்பளத்துடன் அகவிலை படியை இணைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மக்களவையில் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கும் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அடிப்படை சம்பளத்தோடு அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் தற்போதைக்கு அரசிடம் இல்லை அது தொடர்பான எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என கூறியிருக்கிறார் .
வாழ்க்கை செலவினங்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படி என்பதை உயர்த்தி வழங்குகிறது என அவர் விளக்கம் தந்திருக்கிறார்.
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் உயர்த்த வேண்டும் என கோருவதற்கு விலைவாசி உயர்வை காரணமாக கூறுகின்றனர். உதாரணமாக 1 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட ஒரு மத்திய அரசு ஊழியருக்கு 58,000 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கிறது. மற்ற அலோவென்ஸுகள் அடிப்படை சம்பளமான 1 லட்சம் ரூபாயில் தான் சதவீத அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைத்தால் இந்த ஊழியரின் புதிய அடிப்படை சம்பளம் 1.58 லட்சமாக மாறும். இதன் அடிப்படையில் தான் அவருக்கான அலோவென்சுகள் கணக்கிடப்படும். மேலும் அடுத்த கட்ட சம்பள உயர்வும் இந்த 1.58 லட்சம் என்ற புதிய அடிப்படை சம்பளத்தில் தான் கிடைக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications