8வது சம்பள கமிஷன் இருக்கட்டும், முதல் சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: இந்தியாவில் சம்பள கமிஷன்களின் பரிந்துரை அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஒய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த சம்பள கமிஷன் முதன்முதலாக எப்போது அமலுக்கு வந்தது, ஒவ்வொரு முறை சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும்போதும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு உயர்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதல் சம்பள கமிஷன்: 1947 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதத்திற்கு 55 ரூபாயாக இருந்தது. அதிகபட்ச ஊதியம் 2255 ரூபாயாக இருந்தது.

8வது சம்பள கமிஷன் இருக்கட்டும், முதல் சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2ஆவது சம்பள கமிஷன்: 1959 ஆம் ஆண்டு இரண்டாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு 80 ரூபாய் என அதிகரிக்கப்பட்டது. அதேபோல ஓய்வு கால பலன்கள் மற்றும் பிற கொடுப்பனவுகள் முதன்முறையாக சேர்க்கப்பட்டன.

3ஆவது சம்பள கமிஷன்: 1970 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள கமிஷன் பரிந்துரை நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை குறைந்தபட்ச மாத சம்பளம் 185 ரூபாய் என மாறியது .அதேபோல அகவிலைப்படி என்ற நடைமுறை முதன்முறையாக கொண்டுவரப்பட்டது இது ஊதியம் போக மற்ற நிதி சார்ந்த பலன்கள் கிடைப்பதை உறுதி செய்தது.

4ஆவது சம்பள கமிஷன்: 1983 ஆம் ஆண்டு நான்காவது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை மாத சம்பளம் 750 ரூபாய் என உயர்த்தப்பட்டது. இதில் முதன்முறையாக ஊழியர்களுக்கு போக்குவரத்து செலவினங்கள் மற்றும் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்கான கொடுப்பனவுகள் சேர்க்கப்பட்டன.

5ஆவது சம்பள கமிஷன்: 1997 ஆம் ஆண்டு ஐந்தாவது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச மாத சம்பளம் 250 ரூபாய் என மாறியது .அப்பொழுதுதான் ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகையை அகவிலை படியாக வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

6ஆவது சம்பள கமிஷன்: 2008 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 7000 ரூபாய் என உயர்த்தப்பட்டது. இத்தோடு ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற வகையில் கிரேட் சிஸ்டம் கொண்டுவரப்பட்டு அதன் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.

7ஆவது சம்பள கமிஷன்: 2016 ஆம் ஆண்டு ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 18000 ரூபாய் என உயர்த்தப்பட்டது. மேலும் ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்ற நடைமுறையும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

8ஆவது சம்பள கமிஷன்: வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த முறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 51,000 ரூபாய் வரை உயரலாம் என சொல்லப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+