மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு வழங்குவதற்காக 8ஆவது சம்பள கமிஷனை மத்திய அரசு அமைத்தது. அந்த வகையில் வழங்கப்படவுள்ள 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மேலும் சம்பள கமிஷனின் காலக்கெடுவில் 66% முடிந்துவிட்டது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானோர் சம்பள கமிஷன் அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர். 8-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான மத்திய அமைச்சரவையின் Terms of Reference - ToR ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிகாரப்பூர்வ ஆலோசனை கூட்டங்கள் கடந்த மார்ச் மாதம் தொடங்கின.

இதில் ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அமைச்சகங்கள், ஓய்வூதிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் இருந்து ஆலோசனைகளை பெறுவதற்கான காலக்கெடு கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பெறப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே அகவிலைப்படி , வீட்டு வாடகைப்படி ,ஓய்வூதியம் மற்றும் ஊதிய மேட்ரிக்ஸ் ஆகியவை தீர்மானிக்கப்படவுள்ளன. சம்பளக் கமிஷனின் விதிமுறைகளின்படி , கமிஷன் அமைக்கப்பட்டு 18 மாதங்களுக்குள் தனது இறுதி பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி கெடு வரும் மே மாதம் ஆகும்.
சரியாக இன்னும் 6 மாதங்களே இதற்கு இருக்கின்றன. இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) தான் புதிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை எந்த நம்பராக நிர்ணயம் செய்கிறார்கள் அதனை கொண்டு அடிப்படை சம்பளத்தை பெருக்கினால் வருவது தான் புதிய சம்பளம். இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் 3 என நிர்ணயம் செய்யப்பட்டால் தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 18,000 ரூபாயை 3ஆல் பெருக்கினால் வரும் 54,000 ரூபாய் என்பது தான் புதிய அடிப்படை சம்பளமாக இருக்கும்.
சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை வழங்கிய உடன் மத்திய அரசு தனது பட்ஜெட்டிற்கு உட்பட்டு அதனை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என தீர்மானிக்கும். ஏற்று கொண்டால் பிரச்சினை இல்லை ஒரு வேளை நிராகரித்தால் மீண்டும் புதிய பரிந்துரை வரும் வரை சம்பள கமிஷன் அமலாவது தாமதமாகும்.
மே 2027-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், அரசாங்கம் அதை ஆய்வு செய்து நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்த சில காலம் ஆகலாம் என சொல்லபப்டுகிறது. 2028இல் இருந்து தான் முழுமையாக ஊழியர்களின் கைக்கு புதிய சம்பளம் வந்து சேரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பள கமிஷன் அமலுக்கு வருவது தாமதமானாலும், புதிய சம்பள விகிதங்கள் 2026 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு, அதற்கான நிலுவைத்தொகை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications

