மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் உயர்த்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசு தனியாக சம்பள கமிஷனை நியமனம் செய்கிறது. இதில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருப்பார்கள். நாட்டின் தற்போதைய நிதி நிலவரம் ,பொருளாதார நிலவரம் ,பண வீக்கம் , வாழ்க்கை செலவினம் உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கீடு செய்து மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கலாம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய தொகையை எவ்வளவு உயர்த்தி வழங்கலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை இவர்கள் வழங்குவார்கள்.
மத்திய அரசு சம்பள கமிஷனின் பரிந்துரையைப் பெற்று தன்னுடைய பட்ஜெட் ஒதுக்கீடுக்கு இதற்கும் பொருந்துகிறதா என பார்த்து அதற்கேற்ற வகையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையையும் மாற்றி அமைக்கும். தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் வழங்க வேண்டும். அதாவது சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் .

அரசு கடந்த நவம்பரில் தான் எட்டாவது சம்பள கமிஷனை நியமனம் செய்தது. எப்போது தங்களுக்கான புதிய சம்பளம் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு ஊழியர்களும் , ஓய்வூதியதாரர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் மத்திய அரசு சம்பள கமிஷனுக்கு 18 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கால நிர்ணயம் செய்திருக்கிறது . சம்பள கமிஷன் அதற்குள் வழங்கலாம் அல்லது கால நீட்டிப்பு வேண்டுமென்று அரசிடம் கோரலாம்.
வழக்கமாகவே சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையை வழங்கி அரசு அதனை ஏற்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் அப்படி பார்க்கும்போது இந்த சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரையை 2027 ஆம் ஆண்டின் இறுதியில் தான் வழங்கும் என நிபுணர்கள் கணிப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் .

ஏழாவது சம்பள கமிஷனை பொறுத்தவரை ஒரு மாத காலம் நீட்டிப்பு வேண்டும் என கேட்டார்கள் , மத்திய அரசு அவர்களுக்கு நான்கு மாத நீட்டிப்பு வழங்கியது . 8ஆவது சம்பள கமிஷனுக்கு 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அறிக்கை தந்த பிறகு அமைச்சர்கள் குழு அதனை ஆய்வு செய்து அமைச்சரவை ஒப்புதலுக்கும் பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரவும் 2 முதல் 4 மாதங்கள் தேவைப்படும். எனவே தற்போதுள்ள டைம் லைன் படி 22 மாதங்கள் தேவைப்படும்.
இந்தியாவில் இது நாள் வரை நியமனம் செய்யப்பட்ட சம்பள கமிஷன்கள் அனைத்தும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை கால அளவு எடுத்துக் கொண்டன . ஏழாவது சம்பள கமிஷன் 29 மாதங்களையும், ஆறாவது சம்பள கமிஷன் 22 மாதங்களையும் எடுத்துக் கொண்டது. ஐந்தாவது சம்பள கமிஷன் கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது .
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2028ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய சம்பளம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு 2026 ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு அரியர் தொகையை வழங்கிவிடும் என்பதால் அரசு ஊழியர்கள் கவலை கொள்ள தேவையில்லை.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications