இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏழாவது சம்பள கமிஷனின் காலம் முடிவடைந்து ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
8ஆவது சம்பள கமிஷனே இப்போதுதான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் 2028 ஆம் ஆண்டில் தான் சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் கைக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் 2026 ஆம் ஆண்டின் பொருத்தவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு ஜாக்பாட்டுகள் கிடைக்கப் போகும் ஆண்டாக தான் இருக்கப் போகிறது.

8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வருவது தாமதமானாலும் அந்த தாமதமாக கூடிய காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தொகை 2026 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து அரியர் தொகையாக கணக்கிடப்பட்டு வழங்கிவிடும் . அதாவது இந்த இரண்டு ஆண்டுகள் தாமதமானதால் கிடைக்காமல் போன சம்பள உயர்வு தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
இது மட்டும் இல்லாமல் எட்டாவது சம்பள கமிஷனே நடைமுறைக்கு வரவில்லை என்பதால் வழக்கம் போல அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை கிடைக்கக்கூடிய அகவிலைப்படி ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களிலும் கிடைக்கும். அந்த வகையில் பார்க்கும்போது புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வருவதற்கு தேவைப்படும் இந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கப்போகிறது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகை அகவிலை படியாக கிடைக்கிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் உயரப் போகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கப் போகிறது . ஏனென்றால் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இந்த சம்பள கமிஷன் அடுத்த ஆண்டு முழுவதும் தன்னுடைய வேலைகளை தீவிரமாக மேற்கொள்ளும்.
அதாவது நாட்டின் தற்போதைய நிதி நிலவரம் என்ன, அரசுக்கு இருக்கக்கூடிய செலவுகள் என்ன, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அரசு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்யப்போகிறது ,தற்போது இந்தியாவில் ஒரு குடும்பம் வசிப்பதற்கு எவ்வளவு பணம் தேவை உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு ஃபிட்மன்ட் ஃபேக்டர் என்பதை நியமனம் செய்வார்கள்.
இது 2026 ஆம் ஆண்டிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு விடும் என சொல்லப்படுகிறது அவ்வாறு இந்த ஃபிட்மன்ட் ஃபேக்டர் நியமனம் செய்யப்பட்டு விட்டாலே மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயர போகிறது என்பதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் . மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தோடு இந்த ஃபிட்மன்ட் ஃபேக்டர் எண்ணை பெருக்கினால் என்ன தொகை வருகிறதோ அதுதான் அவர்களுக்கான புதிய சம்பளம்.
தற்போது அரசு மத்திய அரசு பணியில் குரூப் ஏ ,பி,சி, டி என பிரித்து இருக்கிறார்கள், இதில் 18 லெவல் வேலைகளும் அதற்கான சம்பளமும் உள்ளன. இவர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரம் என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். 2.15 என ஃபிட்மன்ட் ஃபேக்டர் கணக்கில் கொள்ளப்படலாம் என சொல்லப்படுகிறது. அப்படி பார்க்கும்போது
லெவல் 1 - தற்போதைய சம்பளம் : ரூ. 18,000; புதிய சம்பளம் : ரூ 38,700 (வித்தியாசம்: ரூ. 20,700)
லெவல் 5 - தற்போதைய சம்பளம் : ரூ. 29,200; புதிய சம்பளம்: ரூ. 62,780 (வித்தியாசம்: ரூ. 33,580)
லெவல் 10 - தற்போதைய சம்பளம் : ரூ. 56,100; புதிய சம்பளம்: ரூ. 1,20,615 (வித்தியாசம்: ரூ. 64,515)
லெவல் 15 - தற்போதைய சம்பளம் : ரூ. 1,82,200; புதிய சம்பளம்: ரூ. 3,91,730 (வித்தியாசம்: ரூ. 2,09,530)
லெவல் 18 - தற்போதைய சம்பளம் : ரூ. 2,50,000; புதிய சம்பளம்: ரூ. 5,37,500 (வித்தியாசம்: ரூ. 2,09,530)
லெவல் 18இல் இருப்பவர்கள் குரூப் ஏ நிலையில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள். இவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த சம்பள உயர்வு என்பது மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் 2026 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு முக்கியமான ஆண்டாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications