மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், பணியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கும் நீண்ட காலமாக எதிர்பார்த்த 8வது சம்பள கமிஷன் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்தக் குழு சம்பளம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்து பரிந்துரை செய்யும்.
இதில் மிக முக்கியமான ஒன்று "ஃபிட்மெண்ட் ஃபேக்டர்" எனப்படும் பெருக்குக் காரணி. இது பழைய அடிப்படைச் சம்பளத்தை புதிய சம்பளமாக மாற்றும் முக்கிய எண். இந்தியா முழுவதும் மக்கள் 8வது சம்பள கமிஷன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

8வது ஊதிய கமிஷன் உருவாக்கம்:
மத்திய அரசு சமீபத்தில் அமைத்த 8வது சம்பள கமிஷன், மத்திய அரசின் 48.62 லட்சம் ஊழியர்களுக்கும் 67.85 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம் ஆகியவற்றை மறுஆய்வு செய்து பரிந்துரை செய்யும். இதன் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதிய கமிஷன் உருவாக்க ஜனவரி 2025இல் மத்திய அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 2025இல் இக்குழுவின் பணி விதிகள் (ToR) அனுமதிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் இந்தக் குழு தற்போது செயல்பட்டு வருகிறது.
ஃபிட்மெண்ட் ஃபேக்டர் எவ்வளவாக இருக்கும்?
வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி இம்முறை ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 1.83 முதல் 2.46 வரையிலான இடைவெளியில் இருக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 1.83 ஆகவும், அதிகபட்சம் 2.46 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 ஆகும். இந்த நிலையில் 8வது ஊதிய குழு ஃபிட்மெண்ட் ஃபேக்டர்-ஐ 1.83 ஆக நிர்ணயம் செய்தால் அடிப்படை சம்பளம் ரூ.32,940 ஆக உயரும். இதுவே 2.46 ஆக நிர்ணயம் செய்தால் ரூ.44,280 ஆகவும் உயரும். இறுதி முடிவு இக்குழுவின் இறுதி அறிக்கை வந்த பிறகே மத்திய அரசு எடுக்கும்.
ஃபிட்மெண்ட் ஃபேக்டர் ஏன் முக்கியம்?
இந்தப் Fitment Factor காரணி அடிப்படைச் சம்பளத்தை மட்டுமல்ல, அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, பயணப்படி உள்ளிட்ட அனைத்து படிகளையும் ஒரே நேரத்தில் உயர்த்தும். இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.
எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்?
அம்பிட் கேபிடல் நிறுவனத்தின் ஆய்வின்படி குறைந்தபட்ச மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு 14 சதவீதமாக இருக்கலாம். அதிகபட்சமாக 54 சதவீதம் வரை செல்ல வாய்ப்பு இருந்தாலும், அரசின் நிதி நிலைமை காரணமாக அது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.
பல்வேறு பே கிரேடு நிலைகளில் (1900, 2400, 4600 போன்றவை) 1.92 முதல் 2.57 வரையிலான ஃபிட்மெண்ட் ஃபேக்டரை வைத்து கணக்கிட்டால், ஒவ்வொரு நிலையிலும் சம்பளம் கணிசமாக உயரும் என்று தெரிகிறது.
எப்போது அமலுக்கு வரும்?
8வது சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அரசு ஃபிட்மெண்ட் ஃபேக்டரை இறுதி செய்து அமல்படுத்தும்.
இதுமட்டும் நாட்டின் பொருளாதார நிலைமை, பணவீக்க விகிதம், அரசின் வருவாய் ஆகியவை இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இந்த மாற்றம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications