டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு அடிப்படையில் அடுத்த ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த 8வது சம்பள கமிஷன்வில் ஃபிட்மன்ட் ஃபேக்டர் (Fitment Factor) எந்த விகிதத்தில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும் என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிலர் 8வது ஊதியக்குழு நடைமுறைக்கு வரும்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது 108லிருந்து 186 சதவீதம் வரை உயரும் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் முன்னாள் நிதி செயலாளர் சுபாஷ் சந்திரா அளித்துள்ள பேட்டியில் ஊதிய உயர்வு 20 முதல் அதிகபட்சம் 30 சதவீதமாகவே இருக்கும் என கூறியுள்ளார்.

எனவே ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஊதியம் எவ்வளவு உயரும் என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு முறை சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும்போதும் பணவீக்க விகித அடிப்படையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை மாற்றமடைகின்றன.
அந்த வகையில் தான் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதால் எட்டாவது ஊதியக்குழுவில் தங்களுக்கு அதிகபட்ச சம்பள உயர்வு கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னாள் நிதி செயலாளரான சுபாஷ் சந்திரா ஒரு நேர்காணலில் அரசு 1.92 முதல் 2.08 வரையிலான ஃபிட்மன்ட் ஃபேக்டருக்கு எட்டாவது சம்பள கமிஷன்வில் அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறினார். ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கான குழுவை சேர்ந்த சிவகோபால் 2.86 என்ற விகிதத்தில் இருக்கும் எனக் குறிப்பிடுகிறார். இதனால்தான் தற்போது ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஃபிட்மன்ட் ஃபேக்டர் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் அதிகரிக்கும். தற்போது ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாய் அத்துடன் அகவிலை படியை சேர்த்தால் அது 28,800 என ஆகிறது.
1.92 ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் கணக்கு செய்தால் புதிய ஊதியம் 20% உயரும் அதாவது 34,560 ரூபாயாக இருக்கும்.
2.08 ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் பார்க்கும்போது 37,440 ரூபாய் அடிப்படை சம்பளம் 30 சதவீதம் உயரும்.
2.86 ஃபிட்மன்ட் ஃபேக்டர் விகிதத்தில் பார்க்கும்போது புதிய சம்பளம் 51,480 ஆக இருக்கும். இது 80 சதவீதம் உயர்வு .
எனவே அகவிலைப் படியை சேர்த்தால் 1.92 ஃபிட்மன்ட் பாக்டரில் 92 சதவீத ஊதிய உயர்வு, 2.08 ஃபிட்மன்ட் ஃபேக்டரில் 108 சதவீத ஊதிய உயர்வு, 2.86 ஃபிட்மன்ட் ஃபேக்டரில் 186 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications