டெல்லி: எட்டாவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்புக்காக 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர். பொதுவாக சம்பள கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய தொகையும் அதிகரிக்கும்.
பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் 8வது சம்பள கமிஷனானது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை மதிப்பீடு செய்யும். இதற்காக அவர்கள் ஃபிட்மண்ட் ஃபேக்டர் (Fitment Factor) என்பதை பயன்படுத்துகிறார்கள்.

7ஆவது சம்பள கமிஷன்வைப் பொறுத்தவரை 2.57 என ஃபிட்மண்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டது. 8வது சம்பள கமிஷன்வில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் 2.57 அல்லது அதற்கும் அதிகமாக தான் இருக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான ஜேசிஎம் அமைப்பின் தேசிய செயலாளர் சிவகோபால் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
என்டிடிவி தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 8வது சம்பள கமிஷன்வில் 2.86 ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு சம்பளம் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என மிஸ்ரா தரப்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அவ்வாறு 2.86 ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு கணக்கிடப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் தற்போது இருக்கும் 18,000 ரூபாயிலிருந்து 51,000 ரூபாயாக உயர்த்தப்படும். ஓய்வூதிய தொகை 9,000 ரூபாயில் இருந்து 36,000 ரூபாயாக உயரும்.
ஆனால் முன்னாள் நிதி செயலாளரான சுபாஷ் கார்க் 2.86 ஃபிட்மண்ட் ஃபேக்டர் கேட்பது பேராசை என குறிப்பிட்டிருந்தார், 8வது சம்பள கமிஷன்வில் 1.92 என்ற அளவில் தான் ஃபிட்மண்ட் ஃபேக்டர் இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் என்டிடிவிக்கு மீண்டும் பேட்டி அளித்திருக்கும் மிஸ்ரா, ஏழாவது சம்பள கமிஷன்வில் 2.57 ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்பது 1957ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 15-வது இந்திய தொழிலாளர்கள் மாநாடு மற்றும் Aykroyd formula ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் பல தசாப்தங்கள் பழமையானது என கூறியுள்ளார்.
அவை தற்போது இருக்கக்கூடிய குடும்பங்கள், அவற்றின் பொருளாதாரத் தேவைகள் ,பணவீக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது கிடையாது எனக் கூறியுள்ளார் 7ஆவது சம்பள கமிஷன்வில் ஒரு குடும்பத்தின் செலவினம் என்பது மூன்று யூனிட் என கொண்டு கணக்கிடப்பட்டது. வருமானம் ஈட்டும் கணவனை ஒரு யூனிட் ஆகவும், மனைவியை 0.8 யூனிட் ஆகவும், இரண்டு குழந்தைகளுக்கு தலா 0.6 யூனிட்டுகள் என மொத்தம் மூன்று யூனிட்களாக கணக்கிடப்பட்டது என கூறியுள்ளார்.
8வது சம்பள கமிஷன்வில் குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிடும்போது ஒரு குடும்பத்தின் செலவினத்தை 5 யூனிட்டுகளாக உயர்த்த வேண்டும் என மிஸ்ரா கேட்டுக் கொண்டுள்ளார் . ஏனெனில் தற்போது ஊழியர்கள் அவர்களை சார்ந்திருக்கும் பெற்றோர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
மேலும் Aykroyd formula 20ஆம் நூற்றாண்டுக்கான ஒரு சூத்திரம் அதனை இந்த நவீன காலத்திற்கு மாற்றும்போது டிஜிட்டல் ரீதியாகவும் நம் பல செலவினங்களை மேற்கொள்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது நவீன வாழ்க்கை முறைகள், செலவினங்கள் , பணவீக்கம் ஆகியவற்றை 8வது சம்பள கமிஷன் கருத்தில் கொண்டு மட்டுமே ஊதியத்தை மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications