சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
சம்பள உயர்வு: தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை சம்பள கமிஷன் அமைக்கப்படவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனவரியில் அறிவிப்பு: ஜனவரி மாதமே சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு ஆனால் இதுவரை சம்பள கமிஷனின் உறுப்பினர்கள் மற்றும் குறிப்புரைகள் குறித்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை மாற்றியமைப்பதற்கான டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ் என்பதை வரையறை செய்வதற்கான பணிகளை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சகம் மேற்கொண்டிருக்கிறது. பல்வேறு அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு இருக்கிறதாம்.
7 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை:இந்த பணிகள் முடிந்தவுடன் சம்பள கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 7 மாத முடிவடைந்த நிலையில் இதில் பெரிய அளவில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கான சங்கமும் ஓய்வூதியதாரர்கள் சங்கமும் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
7ஆவது சம்பள கமிஷன்: மத்திய அரசு சம்பள கமிஷனை அமைத்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தங்களுடைய சம்பள பரிந்துரையை வழங்கி அதனை மத்திய அரசு ஏற்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எத்தனை காலம் தேவைப்படும் என்பதை 7ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்த கால அளவோடு ஒப்பிட்டு பார்க்கலாம். மத்திய அரசு 7ஆவது சம்பள கமிஷனை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அறிவித்தது.
எத்தனை ஆண்டு தேவை: சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதாவது 2014 ஆம் தேதி பிப்ரவரி மாதம் தான் டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபெரன்ஸ்கள் இறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக அடுத்த நான்கு நாட்களிலேயே அதாவது 2014 மார்ச் 4ஆம் தேதியே நீதிபதி ஏ கே மாத்தூர் சம்பள கமிஷன் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
2 ஆண்டுகள் 9 மாதம்: 7ஆவது சம்பள கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து தரப்பினரிடமும் பேசி ஒரு ஆண்டு 8 மாத காலங்கள் எடுத்துக்கொண்டு பல மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரையை 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வழங்கினர். மத்திய அரசு இந்த அறிக்கையை பெற்று 7 மாதங்கள் ஆய்வு செய்து 2016 ஜூன் 29ஆம் தேதி தான் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது . 2016 ஜனவரி 1ஆம் தேதி என முன் தேதியிட்டு ஊழியர்களுக்கு பாக்கி சம்பளம் வழங்கப்பட்டது.
8ஆவது சம்பள கமிஷன்: அதாவது சம்பள கமிஷன் அறிவிப்பு முதல் அது நடைமுறைக்கு வருவதற்கு வரை 2 ஆண்டுகள் 9 மாதம் தேவைப்பட்டது. தற்போதைக்கு எட்டாவது சம்பள கமிஷன் ஜனவரி 16ஆம் தேதி தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழாவது சம்பள கமிஷனோடு ஒப்பிட்டால் அனைத்து பணிகளும் நடந்து 8ஆவது சம்பள கமிஷன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2027 இறுதி அல்லது 2028ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் புதிய சம்பளம் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் 2026 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து கிடைக்க வேண்டிய பாக்கி தொகையை அரசு வழங்கி விடும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications