8ஆவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் சம்பளமும் ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு சம்பள கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டது , கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை சம்பள கமிஷனுக்கான உறுப்பினர்கள், தலைவர் நியமிக்கப்படவில்லை.

சம்பள கமிஷன் பணிகள் தாமதமாவது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பள கமிஷன் அமைக்கப்படுவது தாமதமாவதால் தங்களுக்கான சம்பள உயர்வும் தாமதமாவதாக மத்திய அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு சம்பள கமிஷனுக்கான அனைத்து பணிகளையும் முடித்து அதன் பின்னர் சம்பள கமிஷன் ஆய்வு செய்து ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பரிந்துரையை வழங்குவதற்கு எத்தனை மாதங்கள் தேவைப்படும், இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சம்பள கமிஷன்கள் இதற்கு எத்தனை மாதங்களை எடுத்துக் கொண்டன என்பது குறித்து நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

8ஆவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

5ஆவது சம்பள கமிஷன்: 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாவது சம்பள கமிஷன் நியமனம் செய்யப்பட்டு 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அது தன்னுடைய பரிந்துரையை வழங்கியது . இதனை அடுத்து மத்திய அரசு இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தியது. ஊழியர்களுக்கு 1996 ஜனவரி 1ஆம் தேதி என முன் தேதியிட்டு இந்த சம்பள உயர்வு தொகை என்பது வழங்கப்பட்டது .

6ஆவது சம்பள கமிஷன்: 6ஆவது சம்பள கமிஷன் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அரசு இந்த அறிக்கையை ஏற்று 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் புதிய சம்பளத்தை நடைமுறைப்படுத்தியது. ஊழியர்களுக்கு 2006 ஜனவரி ஒன்றாம் தேதி என முன்தேதியிட்டு அரியர் தொகையாக வழங்கப்பட்டது. ஆறாவது சம்பள கமிஷனில் தான் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் என்பது மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் கிரேடு அடிப்படை சம்பளம் கொண்டு வரப்பட்டது.

7ஆவது சம்பள கமிஷன்: 2014 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு நவம்பரில் சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரையை அரசிடம் வழங்கியது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் அரசு அந்த பரிந்துரையை ஏற்று சம்பளத்தை மாற்றி அமைத்தது . இருந்தாலும் 2016 ஜனவரி ஒன்றாம் தேதி என முன் தேதியிட்டு ஊழியர்களுக்கு அந்த மீதமுள்ள அரியர் தொகை என்பது வழங்கப்பட்டது.

8ஆவது சம்பள கமிஷன்: 2025 ஜனவரி மாதமே சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை, குறிப்புரைகள் கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பள கமிஷன் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சம்பள கமிஷனின் நடைமுறைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் சராசரியாக சம்பள கமிஷன் அமைத்து பரிந்துரை வழங்கி அரசு அதனை ஏற்று நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது.

அந்த வகையில் பார்த்தால் 8ஆவது சம்பள கமிஷன் என்பது 2027 ஆம் ஆண்டு இறுதியில் தான் தன்னுடைய பரிந்துரையை வழங்கும் என்றும் 2028 ஆம் ஆண்டிலிருந்து தான் மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிய சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+