டெல்லி: இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். 8ஆவது சம்பள கமிஷன் மூலம் தான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய தொகையும் உயரப் போகிறது.
8ஆவது சம்பள கமிஷன்: வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வர வேண்டும். மத்திய அரசு இதுவரை 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்படும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு இருக்கிறது. சம்பள கமிஷனின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் குறிப்புகள் குறித்த விவரங்களை இன்னும் இறுதி செய்யவில்லை . அரசு இந்த பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஒய்வூதியதாரர்களும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

எவ்வளவு உயரும்: இந்நிலையில் கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் 8ஆவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் எவ்வளவு உயரும் என்ற விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் உயர்கிறது. கோடக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 8ஆவது சம்பள கமிஷன் 1.8 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஃபிட்மண்ட் ஃபேக்டர்: 7ஆவது சம்பள கமிஷனிலேயே 2.57 என ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு சம்பளம் மாற்றப்பட்டது. அதைவிட 30 சதவீதம் குறைவாக 1.8 என்ற அளவில் 8ஆவது சம்பள கமிஷன் ஃபிட்மண்ட் ஃபேக்டரை கருத்தில் கொள்ளும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே 8ஆவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 13% வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஏழாவது சம்பள கமிஷனில் ஊழியர்களுக்கு 14.3% என சம்பளம் உயர்ந்தது.
கோடக் நிறுவனம் அறிக்கை: இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கான சங்கத்தினர் 7ஆவது சம்பள கமிஷவை போலவே 8ஆவது சம்பள கமிஷனிலும் ஃபிட்மண்ட் ஃபேக்டரை 2.57 அல்லது அதற்கு மேல் கொண்டு கணக்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு அமைப்புகளும் இந்த முறை ஃபிட்மண்ட் ஃபேக்டர் குறைவாகவே இருக்கும் என கணிக்கின்றன. கோடக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.
அடிப்படை சம்பளம் உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் என்பது தற்போது 18,000 ரூபாயாக இருக்கிறது அது 32,000 ரூபாயாக உயரும். 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்டவருக்கு 9,900 ரூபாய் அகவிலைப்படியாக தற்போது கிடைக்கிறது. புதிய சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கும் போது அகவிலைப்படி 0 என மாறிவிடும். எனவே 32,000 ரூபாய் சம்பளம் மட்டுமே கிடைக்கும். இதன்படி பார்த்தால் ஒட்டு மொத்தமாக சம்பள உயர்வு என்பது வெறும் 13 சதவீதமாக தான் இருக்கும்.
அகவிலைப்படி 0 ஆகிவிடும்: அடிப்படை சம்பளம் 50 ,000 ரூபாய் என இருக்க கூடிய ஒரு மத்திய அரசு ஊழியருக்கு 27,500 ரூபாய் அகவிலை படியாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 77,500 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் எட்டாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் போது அகவிலைப்படி 0 என மாறிவிடும். மொத்தமாக அவருக்கு கிடைக்கும் சம்பளம் 90,000 ஆக மட்டும் இருக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications