8ஆவது சம்பள கமிஷன் – மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் தான் ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் சம்பள கமிஷன் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் தான் முடிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளமும் ஓய்வுதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

8ஆவது சம்பள கமிஷன்: 7ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் காலாவதி ஆவதால் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் 8ஆவது சம்பள கமிஷன் அமைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தது. இந்த 8ஆவது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை குறித்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தன்னுடைய பரிந்துரைகளை வழங்கும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை உள்ளிட்டவை உயர்த்தப்படும்.

8ஆவது சம்பள கமிஷன் – மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

ஜனவரி 1 முதல் 8ஆவது சம்பள கமிஷன்: வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷனர் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக சம்பள கமிஷன் ஃபிட்மண்ட் ஃபேக்டர் (FITMENT FACTOR) என்ற ஒரு காரணியை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கும். ஏழாவது ஊதிய சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தியது.

சம்பளம் எவ்வளவு உயரும்: 8ஆவது சம்பள கமிஷன் 2.86 என்ற அளவில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு கணக்கீடு செய்ய வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வேளை 8ஆவது சம்பள கமிஷனில் 2.86 என ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 51,480 ரூபாயாக உயரும், அதேபோல குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை தற்போது 9,000 ரூபாயாக இருக்கிறது அது 25,740 ஆக உயரும். 8ஆவது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு என அனைவரிடமும் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையிலும் ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படையிலும் தான் ஊதியத்தை மாற்றி அமைக்கும்.

அலோவென்சுகள் மாறுமா?: அடிப்படை ஊதியத்தை மாற்றுவது மட்டும் இல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய வீட்டு வாடகை அலோவென்ஸ், டிராவல் அலோவென்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்க உள்ளது. இவை மாற்றப்படும் போது அதற்கேற்றபடியும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் என்பது உயரும். குறிப்பிட சில அலோவென்சுகளை நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஓய்வூதிய பங்களிப்பு: தற்போதைக்கு மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10% தொகையை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர், அரசு 14 சதவீதம் தொகையை அந்த குறிப்பிட்ட ஊழியரின் பெயரில் பங்களிப்பு செய்கிறது. ஊழியர்களின் சம்பளம் ஏறும் போது இந்த பங்களிப்பு தொகையும் உயரும்.

2.28 ஃபிட்மண்ட் ஃபேக்டரில் எவ்வளவு சம்பளம் உயரும்?: தற்போதைக்கு சம்பள கமிஷன் 2.28 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு ஊழியர்கள் சம்பளத்தை மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட சில கிரேடில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கணக்கீட்டை பார்க்கலாம்.

கிரேட் 2000இல் லெவல் 3இல் இருக்கும் ஊழியரின் அடிப்படை சம்பளம் 57,456 ரூபாய் என உயரும், மற்ற அலோவென்சுகள் சேர்த்து மொத்த ஊதியம் 74,845 ஆக இருக்கும், பிடித்தங்கள் போக கைக்கு 68,849 ரூபாய் கிடைக்கும்.

கிரேட் 4200இல் லெவல் 6இல் இருக்கும் ஊழியரின் அடிப்படை சம்பளம் 93,708 ரூபாய் என உயரும், மற்ற அலோவென்சுகள் சேர்த்து மொத்த ஊதியம் 1,19,798 ஆக இருக்கும், பிடித்தங்கள் போக கைக்கு 1,09,977 ரூபாய் கிடைக்கும்.

கிரேட் 5400இல் லெவல் 9இல் இருக்கும் ஊழியரின் அடிப்படை சம்பளம் 1,40,220 ரூபாய் என உயரும், மற்ற அலோவென்சுகள் சேர்த்து மொத்த ஊதியம் 1,81,073 ஆக இருக்கும், பிடித்தங்கள் போக கைக்கு 1,66,401 ரூபாய் கிடைக்கும்.

கிரேட் 6600இல் லெவல் 11இல் இருக்கும் ஊழியரின் அடிப்படை சம்பளம் 1,84,452 ரூபாய் என உயரும், மற்ற அலோவென்சுகள் சேர்த்து மொத்த ஊதியம் 2,35,920 ஆக இருக்கும், பிடித்தங்கள் போக கைக்கு 2,16,825 ரூபாய் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+