மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தும் என்றாலும், இதன் பலன் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பெரிய அளவில் சென்றடையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த 8வது சம்பள கமிஷன் மூலம் அரசு ஊழியர்களின் கையில் அதிகப் பணம் வந்தால் அது செலவாக மாறி, கடைவீதி முதல் வீட்டு வாடகை வரை அனைத்தையும் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கூடுதல் பண வரவு
8வது சம்பள கமிஷன் மூலம் சம்பள உயர்வு கிடைத்ததும் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கூடுதலாக செலவு செய்வார்கள். இது கடைகள், சந்தைகள், உணவகங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நல்ல வருமானத்தைத் தரும். ஒரு குடும்பத்தின் கையில் பணம் அதிகமானால் அது பொருளாதாரத்தின் சக்கரத்தை வேகமாகச் சுழல வைக்கும். குறிப்பாக நுகர்வோர் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை உயரும். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைக்கும்.
வீடு வாங்கும் கனவு நிறைவேற வாய்ப்பு
8வது சம்பள கமிஷன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்ததும் பல குடும்பங்கள் சொந்த வீடு வாங்க முடிவு செய்வார்கள், இதனால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் சப்ளை செயின் இதன் மூலம் நன்மை அடையும். இதேபோல் வீட்டுக் கடன் எடுப்பது எளிதாகும்.
ஏற்கனவே வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகையை சுலபமாகக் கொடுப்பார்கள். இதனால் ரியல் எஸ்டேட் துறை புத்துயிர் பெறும். வீட்டு விலை, கட்டுமானப் பொருட்கள் தேவை அதிகரிக்கும். பல நகரங்களில் வீட்டு விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது.
கிராமப்புற, டவுன் பொருளாதாரம் மேம்படும்
மத்திய அரசு ஊழியர்கள் பலர் பெரிய நகரங்களுக்கு வெளியே கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வசிக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் சம்பளம் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக செலவு செய்ய தூண்டும். இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள சிறு கடைகள், உள்ளூர் சந்தைகள், சிறுத் தொழில்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும். இதனால் அந்தப் பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கிராமப்புற பொருளாதாரம் வலுவடையும்.
முதியோருக்கு பெரிய நிம்மதி
65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். இது முதியோர்கள் வாழும் குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியைக் குறைக்கும். மருத்துவச் செலவு, அன்றாடத் தேவைகள் ஆகியவற்றை சுலபமாகச் சமாளிக்க முடியும். பல குடும்பங்களில் நிதி சுமையை குறைக்கும்.
அரசுக்கு கூடுதல் செலவு
8வது சம்பள கமிஷன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினாலும், அரசின் ஊதியச் செலவு பெரிதும் உயரும். இதனால் பட்ஜெட் ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் வரும். இது அரசு நிதி செலவினத்திற்கு சுமையாக இருந்தாலும், இது நல்ல முதலீடு என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஊழியர்களின் கையில் பணம் அதிகரிப்பதால் வரி வருவாயும் உயரும், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
விலைவாசி சற்று உயர வாய்ப்பு
கூடுதல் செலவு அதிகரிப்பதால் சில பொருட்களின் விலை சற்று உயரலாம். இது பணவீக்கத்தை லேசாக உயர்த்தலாம். ஆனால் உயர்வு எவ்வளவு என்பது ஊதிய உயர்வின் அளவைப் பொறுத்தே அமையும். பணவீக்கத்தில் சிறிய அளவில் உயர்ந்தால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 ஆகும். இந்த நிலையில் 8வது ஊதிய குழு ஃபிட்மெண்ட் ஃபேக்டர்-ஐ 1.83 ஆக நிர்ணயம் செய்தால் அடிப்படை சம்பளம் ரூ.32,940 ஆக உயரும். இதுவே 2.46 ஆக நிர்ணயம் செய்தால் ரூ.44,280 ஆகவும் உயரும். இறுதி முடிவு இக்குழுவின் இறுதி அறிக்கை வந்த பிறகே மத்திய அரசு எடுக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு வெறும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் புது உத்வேகத்தைத் தரும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications