இந்தியாவை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சம்பள கமிஷன் குறித்த அப்டேட்களுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கின்றனர். ஏற்கனவே சம்பள கமிஷன் தாமதம் ஆகிவிட்டது.
முறைப்படி இந்த ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து 8ஆவது சம்பளம் கமிஷன் பரிந்துரைப்படி புதிய சம்பளமும் புதிய ஓய்வூதியமும் இவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது தாமதமாகிவிட்டது. ஏனெனில் மத்திய அரசு எட்டாவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பையே கடந்த ஆண்டு இறுதியில் தான் வெளியிட்டது.

மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்தது. அதன் பின்னர் சம்பள கமிஷன் குறித்த எந்த பணிகளும் நடக்கவில்லை. அரசு ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில் 8ஆவது சம்பள கமிஷன் குறித்து அக்டோபர் மாதம் தான் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டது அரசு.
சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர், குறிப்புரைகள், காலக்கெடு ஆகியவையும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் மத்திய பட்ஜெட்டில் சம்பள கமிஷன் தொடர்பாகவும் சம்பள உயர்வு தொடர்பாகவும் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிடப்படுமா என லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம்தான்.
மத்திய பட்ஜெட்டில் சம்பள கமிஷன் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இடம் பெறாததால் மேற்கொண்டு சம்பள கமிஷன் தாமதமாகுமோ என்ற கவலை அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட்டில் செலவினத்தில் 41,413 கோடியை அதிகரித்திருக்கிறது. இது குறைந்தபட்ச செலவின உயர்வு தான். புதிதாக வேலைக்கு அமர்த்தக்கூடிய நபர்கள் மற்றும் அகவிலைப்படி உயர்வுக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கும்.
புதிய சம்பள கமிஷனுக்கு என நிதி ஒதுக்கீடு செய்யவில்லை தனியாகவும் இது தொடர்பாக நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே இந்த நிதியாண்டில் சம்பள கமிஷன் அமலுக்கு வராது என்பதையே பட்ஜெட் நமக்கு உணர்த்துகிறது.
அக்டோபரில் சம்பள கமிஷனுக்கான குறிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு 18 மாதம் அவகாசம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. இதன்படி பார்க்கும்போது 2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்கும். ஆனால் அதுவரை ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு ஆண்டுகள் தாமதமானாலும் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்க வேண்டிய சம்பள பணம் அரியர் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என கூறப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications