8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரியர் தொகை மூலம் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகையைத் தீர்மானிக்க மத்திய அரசு 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8வது சம்பள கமிஷன் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவுக்கு இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் கணக்கீட்டு முறை, எவ்வளவு சம்பள உயர்வு அளிக்க வேண்டும், பிட்மென்ட் பேக்டர் போன்றவற்றை கணக்கிடுவதற்கு முன்பு நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் யூனியன் மற்றும் அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களைக் கேட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்துள்ளது.

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரியர் தொகை மூலம் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!

அடுத்த கூட்டம் அக்.22 தேதி மும்பையில் துவங்க உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. அதாவது முழு அறிக்கை சமர்ப்பிக்கத் தாமதம் ஆனாலும், 10 வருட இடைவெளியில் சம்பளம் உயர்வு கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஜனவரி 1, 2026 தான் புதிய சம்பளம் வரக்கூடிய நாள்.

ஆனால் 8வது சம்பள கமிஷன் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்க மே 3, 2027 வரையில் கால அவகாசம் உள்ளது. இதேபோல் அறிக்கை சமர்ப்பித்த உடனே புதிய சம்பளத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த சில காலம் தேவைப்படும். சம்பள கமிஷன் மூலம் பல லட்சம் ஊழியர்களின் சம்பளம் உயரும் காரணத்தால் அரசுக்கு இது பெரும் நிதி சுமையாக இருக்கும்.

Also Read

இதனால் போதுமான நிதி ஆதாரத்தை உருவாக்க சில காலம் தேவைப்படும். அதேபோல் சம்பள கமிஷனின் பரிந்துரையை எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் மத்திய அரசு ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கும்.

உதாரணமாக 5வது சம்பள கமிஷன் சமர்ப்பிக்கப்பட்டு 19 மாதங்களுக்குப் பின்பு நடைமுறைப்படுத்தப்பட்டது, இதுவே 6வது சம்பள கமிஷனில் 32 மாதம் தாமதம் இருந்தது. ஆனால் 7வது சம்பள கமிஷனில் அறிக்கை சமர்ப்பித்த 6 மாதத்திற்குள் புதிய சம்பளம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப்படி பார்க்கும் போது ஜனவரி 1, 2026 தான் புதிய சம்பளம் நடைமுறைப்படுத்த வேண்டிய நாள் (effective date) என்பதால் மத்திய அரசு அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அரியர் தொகை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended For You

இதேபோல் மத்திய அரசு எப்போது 8வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை. இதனால் மும்பையில் நடக்கும் ஊழியர்கள் யூனியன் கூட்டத்தில் இது முக்கியமான பேசுபொருளாக இருக்கக் கூடும்.

மேலும் இந்த effective date என்பது மிகவும் முக்கியம், இதன் அடிப்படையில் தான் அரியர் தொகைக்கான மாதங்கள் கணக்கிடப்படும். கிட்டத்தட்ட 15-20 மாதங்கள் இடைவெளி இருக்கும் காரணத்தால் இந்த அரியர் தொகையே பெரும் பண தொகுப்பாக ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்களுக்கும் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+