இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில் தான் ஊதியம் ஊதியமும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்தியாவில் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்படும்.
சம்பள கமிஷன்: தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரை அடிப்படையில் தான் இந்தியாவில் மத்திய ஊழியர்களுக்கான சம்பளம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது சம்பள கமிஷனை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இதற்காக மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனை நியமனம் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த சம்பள கமிஷன் எப்பொழுது தங்களுடைய பரிந்துரைகளை வெளியிடும் என மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

தாமதம் ஆகிறதா?: எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கி அரசு அதனை ஏற்று அதற்கேற்றபடி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வு தொகையையும் மாற்றி அது வரும் ஜனவரி மாதத்திலேயே அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் தற்போதைக்கு சம்பள கமிஷனை மட்டுமே அரசு நியமனம் செய்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகள்: இவர்கள் அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடைய பரிந்துரைகளை வழங்குவதற்கு போதிய கால அவகாசம் தற்போதைக்கு இல்லை. உதாரணமாக ஏழாவது சம்பள கமிஷன் என்பது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது அதன் பரிந்துரைகள் இரண்டு ஆண்டுகள் முடிந்து 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
எப்போது புதிய சம்பளம்: ஆனால் மத்திய அரசு 2026 ஜனவரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய 8ஆவது சம்பள கமிஷனை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த சம்பளக் கமிஷனின் உறுப்பினர்கள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை இதுவரை மத்திய அரசு இறுதி செய்யவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும் போது 2026 ஜனவரியிலிருந்து அவர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்காது.
எப்போது வர வாய்ப்பு: சம்பள கமிஷன் பரிந்துரைகளை வழங்கி அது நடைமுறைக்கு வருவதற்கு 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தாமதமாகலாம் என சொல்லப்படுகிறது. சம்பள கமிஷன் தாமதமாக நடைமுறைக்கு வந்தாலும் 2026 ஜனவரி மாதத்தில் இருந்து அது நடைமுறைக்கு வந்ததாக கருதப்பட்டு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த கூடுதல் தொகையை மத்திய அரசு அரியர் பணமாக வழங்கும். இருந்தாலும் 8ஆவது சம்பள கமிஷன் எப்படி ஊழியர் சம்பளத்தை மாற்றி அமைக்க போகிறது , ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்ன என்பது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பாத்து காத்து கிடக்கின்றனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications