டெல்லி: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 8ஆவது ஊதிய குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஊதிய குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த ஆண்டிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மாற்றம் அடையும். கூடிய விரைவில் இந்த ஊதிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஆவது ஊதிய குழு அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஊதிய குழுவில் Fitment Factor எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட போகிறது, ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நிர்ணயம் செய்யும்போது என்னென்ன அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட இருக்கின்றன என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடையாது.
ஊதிய குழுக்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை மட்டும் மறு ஆய்வு செய்வது கிடையாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு கொடுப்பனவுகள் (Allowance) மற்றும் பிற வசதிகளையும் இது ஆய்வு செய்து மாற்றி அமைக்கிறது. இந்த நிலையில் தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த 8ஆவது ஊதிய குழு பழைய மற்றும் தேவையில்லாத சில கொடுப்பனவுகளை நீக்கிவிட்டு தேவைப்பட்டால் புதிய சில கொடுப்பனவுகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 7ஆவது ஊதியக்குழுவும் இதுபோல பல்வேறு கொடுப்பனவுகளை நீக்கியதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. ஏழாவது ஊதியக்குழு 196 கொடுப்பனவுகளை ஆய்வு செய்தது, அதில் 95 கொடுப்பனவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை நீக்கியது. அதாவது 106 கொடுப்பனவுகள் தேவையற்றவை எனக் கூறி நிராகரித்தது. சில கொடுப்பனவுகள் முழுவதுமாக நீக்கப்பட்டன, சில மற்றவற்றுடன் சேர்க்கப்பட்டன.
7ஆவது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை பிட்மன்ட் பேக்டர் 2.57 என்ற அளவீட்டில் கணக்கீடு செய்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2 ,25, 000 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த நிலையில் 8ஆவது ஊதிய குழு அமைக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களை நியமனம் செய்யும் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. இந்த ஊதிய குழு உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட பிறகு ஆய்வு செய்து பரிந்துரை வழங்க ஓராண்டு காலம் எடுத்துக் கொள்ளும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications