இந்திய அரசு ஊழியர்களிடையே 8வது சம்பள கமிஷன் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த 7வது சம்பள கமிஷன், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறைந்தபட்ச தொகையை ரூ. 7,000-லிருந்து ரூ. 18,000 ஆகவும், உயர் அதிகாரிகளின் அதிகபட்ச சம்பளத்தை 2.5 லட்சம் ரூபாய் வரையிலும் உயர்த்தியது.
பொதுவாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. இந்த காலவரையை வைத்து பார்க்கும் போது, 8வது சம்பள கமிஷன் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும்.

2026ல் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் அமைத்து இதற்கான கள ஆய்வுகளை தற்போது துவங்கியிருக்க வேண்டும், ஆனால் இது குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை மத்திய அரசு வெளியிட்டவில்லை என்பதால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சில அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது, அதாவது மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் அமைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதை விடுத்து, சம்பள உயர்வை செயல்திறன் அல்லது பணவீக்க விகிதத்துடன் இணைப்பது போன்ற மாற்று வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த அணுகுமுறை வந்தால் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு ஓவ்வொரு வருடமும் கிடைக்கும், தற்போது நடைமுறையில் இருப்பது போல் பத்து வருடத்திற்கு ஒரு முறை மதிப்பாய்வு சுழற்சி கட்டமைப்பு எளிதாக நீக்கிவிட முடியும். இப்புதிய முறை மூலம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் அடிக்கடி மாற்றம் செய்வது எளிதாகும், அதேபோல் திறமையான ஊழியர்களை பெரிய அளவில் ஊக்குவிக்க முடியம்.
இதேவேளையில் மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் 8வது சம்பள கமிஷனை "தற்போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை அரசு ஊழியர்களின் சம்பள திருத்தங்களின் எதிர்காலம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
8வது சம்பள கமிஷன் அமைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் அரசு தனது பணியாளர்களுக்கு நியாயமான மற்றும் போட்டித்திறன் அடிப்படையிலான ஊதியத்தை உறுதி செய்யும் புதுமையான வழிகளை ஆராய்ந்து வருவது தெளிவாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications