ரூ.69,000ஆக உயர்கிறதா அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்? 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் பரபர…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பணிகளை தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்படுகிறது.

2026 ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷனே கடந்த ஆண்டு இறுதியில் தான் அமைக்கப்பட்டது என்பதால் இந்த முறை சம்பள கமிஷன் பணிகள் தாமதம் ஆகிவிட்டன. சம்பள கமிஷன் பரிந்துரையை அனுப்பி அது நடைமுறைக்கு வந்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு 2028 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. அப்படியே தாமதம் ஆனாலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான அரியர் தொகை கணக்கிட்டு வழங்கப்பட்டு விடும்.

ரூ.69,000ஆக உயர்கிறதா அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்? 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் பரபர…!!

இந்த சூழலில் எட்டாவது சம்பள கமிஷன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான என்சி-ஜேசிஎம் கூட்டமைப்பு 51 பக்கம் கொண்ட ஒரு கோரிக்கை மனுவை எட்டாவது சம்பள கமிஷனிடம் சமர்ப்பித்திருக்கிறது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 3.83 என்ற ஃபிட்மன்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.

Also Read

இது ஏற்கப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் 3.8 மடங்குக்கு மேல் உயரும். தற்போதுள்ள அளவிலிருந்து மூன்றரை மடங்குக்கு மேல் உயர்த்தப்பட வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் குறிப்பிட்ட சில பே லெவல்களை ஒருங்கிணைப்பது, பணவீக்கம் அடிப்படையிலான அகவிலைப்படி உயர்வு தேவை என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Recommended For You

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய வீட்டு வாடகை கொடுப்பனுவிலும் மாற்றம் வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது மெட்ரோ நகரங்களுக்கு 40 சதவீத ஹவுஸ் ரெண்ட் அலொவென்ஸ் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். ஹவுஸ் ரெண்ட் அலோவென்ஸ், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றை பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த கோரிக்கை ஏற்று ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 3.83 என நியமனம் செய்யப்பட்டால் தற்போது 18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் வாங்கக்கூடிய மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் மூன்று 69,000 ரூபாயாக உயரும். லெவல் 10 நிலையில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 2.15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+