8வது சம்பள கமிஷன்: ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்..!! பென்ஷனே இவ்வளவு உயருமா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை தான் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாகவே ஒய்வூதிய பலன்களை பெறுகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதலே ஓய்வூதிய தொகை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அரசு சம்பள கமிஷனையே கடந்த ஆண்டு இறுதியில் தான் அமைத்தது. இதனால் ஓய்வூதிய உயர்வு கிடைக்க 2028 ஜனவரி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8வது சம்பள கமிஷன்: ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்..!! பென்ஷனே இவ்வளவு உயருமா?

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்கள் வாழ்க்கை செலவினங்கள், மருத்துவ செலவினங்கள் உள்ளிட்டவை அதிகரித்திருப்பதால் ஓய்வூதிய தொகையை கணிசமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது 7ஆவது சம்பள கமிஷனின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 9,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதிய வரம்பு 1,25,000 ரூபாயாகவும் உள்ளது. Fitment Factor அடிப்படையில் தான் ஓய்வூதிய தொகை என்பது உயரும். அப்படி பார்த்தால் Fitment Factor எவ்வளவாக நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதை பொறுத்து தான் ஓய்வூதியம் உயரும்.

Also Read

பல்வேறு அமைப்புகளும் 2.86 முதல் 3.83 வரையிலான ஃபிட்மெண்ட் ஃபேக்டரை கொண்டு பென்ஷனை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. இதன்படி நாம் கணக்கு செய்து பார்த்தால் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபேக்டரை வைத்து கொண்டால் கூட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகை 25,740 ரூபாயாக உயரும். அதே போல 3.83 என வைத்து கணக்கிட்டால் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை 34,470 ரூபாயாக அதிகரிக்கும்.

சம்பள கமிஷன் ஃபிட்மெண்ட் ஃபேக்டரை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். மத்திய அரசு தனது பட்ஜெட் , நாட்டின் நிதி நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஃபிட்மெண்ட் ஃபேக்டரை ஏற்கலாம் அல்லது நிராகரித்து மீண்டும் அனுப்பலாம். எனவே மத்திய அரசும் ஏற்கும் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் தான் இறுதியானது.

Recommended For You

சம்பள கமிஷன் நடைமுறைக்கு வருவது 2 வருடங்கள் தாமதமானாலும், இந்த 2 ஆண்டுகளுக்கான அரியர் தொகை கணக்கிடப்பட்டு ஓய்வூதியதாரர்களுக்கு மொத்த பணமாக வழங்கப்படும். உதாரணமாக குறைந்த பட்ச ஓய்வூதியம் 25,000 ரூபாயாக உயர்கிறது, ஆனல் சம்பள கமிஷன் தாமதம் காரணமாக இந்த 2 ஆண்டுகளும் பழைய பென்ஷனான 9,000 ரூபாய் தான் பெறுகிரார்கள் என்றால், மீதமுள்ள 16,000 ரூபாய் இந்த 24 மாதங்களுக்கும் கணக்கிட்டு 3,84,000 ரூபாய் அரியர் பணமாக வழங்கப்படும். எனவே சம்பள கமிஷன் தாமதம் ஆனாலும் ஓய்வூதியதாரர்கள் கவலைப்பட தேவையில்லை.

மேற்கண்ட கணக்கீடுகள் மற்றும் தொகைகள் அனைத்தும் தற்போதைய மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் மட்டும் தான். இறுதி ஓய்வூதிய தொகை மத்திய அரசின் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+