Post Man அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயர்கிறதா? 8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய வேலைகளை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. அந்த வகையில் 8ஆவது சம்பள கமிஷன் பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தற்போது பெற்று வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. 2026 ஜனவரி 1ஆம் தேதியே அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷன் கடந்த ஆண்டு இறுதியில் தான் அமைக்கப்பட்டது என்பதால் சம்பள உயர்வு 2028 ஆம் ஆண்டு ஜனவரி வரை தள்ளிப் போகிறது.

Post Man அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயர்கிறதா? 8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்

அப்படியே தள்ளிப் போனாலும் இந்த இரண்டு ஆண்டுகளுக்கான கூடுதல் சம்பளம் என்பது அரியர் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும். தற்போது சம்பள கமிஷன் பல்வேறு தரப்பு ஊழியர்களின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டு வரக்கூடிய நிலையில் தபால் நிலையங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கான கூட்டமைப்பு தங்கள் தரப்பு கோரிக்கைகளை மனுவாக எட்டாவது சம்பள கமிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

Also Read

இதில் சம்பள கட்டமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் ,அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போஸ்டல் அசிஸ்டன்ட், போஸ்ட்மேன் , மெயில் கார்டு, அட்மினிஸ்ட்ரேடிவ் ஸ்டாஃப் என பல்வேறு பிரிவினருக்கும் சம்பள கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் வேலைகளில் இருப்பவர்களுக்கு தற்போது அடிப்படை ஊதியமாக மாதம் 18 ஆயிரம் ரூபாய் இருக்கிறது இதனை மாதம் 69 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல லெவல் 5 நிலையில் இருக்கக்கூடிய போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு போன்ற வேலையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு தற்போது மாதம் 25,500 ரூபாய் அடிப்படை சம்பளமாக இருக்கிறது இதனை 1,12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு பே லெவலில் இருக்கக்கூடிய சம்பளங்களை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Recommended For You

3.83 என்ற ஃபிட்மெண்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வினை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது தபால் நிலைய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை ஆண்டுக்கு 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். வீட்டு வாடகை அலோவென்ஸை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

பெண் ஊழியர்கள் தங்களுடைய குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வரக்கூடிய வகையில் அலுவலகத்திலேயே குழந்தை பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த கோரிக்கை மனுக்களை ஏற்று இருக்கக்கூடிய சம்பள கமிஷன் அடுத்து வரக்கூடிய மாதங்களில் பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+