மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டதால் சம்பள உயர்வு குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை அமைக்கப்படும் இந்த சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் படிகளை மறுஆய்வு செய்து உயர்த்தப்பட்டும்.
இந்த சம்பள உயர்வை ஃபிட்மென்ட் ஃபேக்டர் மூலம் கணக்கிடப்படும் வேளையில், 8வது சம்பள கமிஷனில் உண்மையில் எந்த அளவுக்கு உயரும் என்பதை ஒரு ரியாலிட்டி செக் செய்து பார்க்க போகிறோம்.

7வது சம்பள கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 மடங்காக இருந்தது, இப்போதும் கணிசமான உயர்வு இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் இந்த உயர்வின் அளவு தெரிய குறைந்தது 18 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் பணிகளின் நிலை, 4 குரூப் கீழ் மொத்தம் 18 லெவல்களிள் பிரிக்கப்பட்டு உள்ளது. லெவல் 1 குரூப் டி பணிகளில் தொடங்குகின்றன. இப்படி லெவல் 18 கேபினெட் செயலர், ஐஏஎஸ் போன்ற உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி குரூப் டி, சி, பி, ஏ பிரிவில் மொத்தம் 18 லெவலில் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு சம்பள கமிஷன்விலும் அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் ஃபேக்டர் மூலம் உயர்த்தப்படுகிறது. 6வது சம்பள கமிஷன்வில் 1.92, 7வது சம்பள கமிஷனில் 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் மூலம் சம்பளம் உயர்ந்த நிலையில், தற்போது 8வது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எந்த அளவுக்கு உயரும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
தற்போதைய அடிப்படை சம்பளம்
தற்போது நடைமுறையில் இருக்கும் 7வது சம்பள கமிஷனில் லெவல் 1 முதல் 5 வரையிலான ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை (Minimum basic pay) சம்பளம் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்தால் தான் 8வது சம்பள கமிஷனில் எந்த அளவுக்கு உயர்கிறது என தெரியும்.
லெவல் 1இல் 18,000 ரூபாய், லெவல் 2இல் 19,900 ரூபாய், லெவல் 3இல் 21,700 ரூபாய், லெவல் 4இல் 25,500 ரூபாய், லெவல் 5இல் 29,200 ரூபாய் ஆகும். இவை குரூப் டி மற்றும் குரூப் சி பணியாளர்களுக்கு பொருந்தும். இதோடு அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச அடிப்படை (Minimum basic pay) சம்பளம் + கிரேடு பே (பதவி அல்லது பணி அடிப்படையிலான சம்பளம்) + பல்வேறு கொடுப்பனவு ஆகியவை இணைத்து தான் மொத்த சம்பளமாக பெறுவார்கள்.
1.92 ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு
பழைய 6வது சம்பள கமிஷன் போல 1.92 மடங்கு ஃபிட்மென்ட் ஃபேக்டர் வந்தால் 8வது சம்பள கமிஷனில் லெவல் 1 ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 34,560 ரூபாயாக உயரலாம். லெவல் 2இல் 38,208 ரூபாய், லெவல் 3இல் 41,664 ரூபாய், லெவல் 4இல் 48,960 ரூபாய், லெவல் 5இல் 56,064 ரூபாய் ஆகலாம்.
2.15 ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு
சில வல்லுநர்கள் 2.15 மடங்கு ஃபிட்மென்ட் ஃபேக்டர் வரலாம் என கணிக்கின்றனர். இதன்படி பார்த்தால் லெவல் 1இல் அடிப்படை சம்பளம் 38,700 ரூபாயாகவும், லெவல் 2இல் 42,785 ரூபாயாகவும், லெவல் 3இல் 46,655 ரூபாயாகவும், லெவல் 4இல் 54,825 ரூபாயாகவும், லெவல் 5இல் 62,780 ரூபாயாகவும் உயர வாய்ப்புள்ளது. இது நடுத்தர அளவிலான உயர்வாக இருக்கும்.
2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு
7வது சம்பள கமிஷன் போல 2.57 மடங்கு ஃபிட்மென்ட் ஃபேக்டர் வந்தால்லெவல் 1இல் 46,260 ரூபாய், லெவல் 2இல் 51,143 ரூபாய், லெவல் 3இல் 55,769 ரூபாய், லெவல் 4இல் 65,535 ரூபாய், லெவல் 5இல் 75,044 ரூபாய் ஆக அடிப்படை சம்பளம் உயரலாம். இது ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை தரும்.
8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் போது தான் உண்மையான உயர்வு தெரியவரும். அதுவரை இந்த கணிப்புகள் ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications