இந்தியா முழுவதும் லட்ச கணக்கான அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷன் முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் மத்திய அரசு டிசம்பர் 8 ஆம் தேதி முக்கியமான அப்பேட்டை வெளியிட்டுள்ளது.
என்கே பிரேம்சந்திரன், தங்க தமிழ்செல்வன், கணபதி ராஜ்குமார் பி, தர்மேந்திர யாதவ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இந்த 8வது சம்பள கமிஷன் மூலம் தற்போது பணியில் இருக்கும் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடையவர்கள் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 8வது சம்பள கமிஷன் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான பதில் மூலம் தெரிவித்தார். இதில் முக்கியமாக 8வது சம்பள கமிஷன் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
8வது சம்பள கமிஷன் செயல்படுத்தும் தேதியை மத்திய அரசே தீர்மானிக்கும் என்று தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்ட தேதியில் இருந்து 18 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தனது பரிந்துரைகளை அளிக்கும் என தெரிவித்தார்.
இதேபோல் 8வது சம்பள கமிஷன் அடிப்படையிலான சம்பளத்தை வழங்க 2026-27 நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்தார்.
8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இதுவரையில் 41 நாட்கள் கடந்துள்ளன. இந்தக் குழு அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதிய அமைப்பு, ஓய்வூதியங்கள், சலுகைகள், பிற சலுகைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். இதில் முக்கியமாக ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய உயர்வு அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் நவம்பர் மாத இறுதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இருந்த மிகப்பெரிய குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு, அதாவது DA தொகையை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து, இத்தகைய திட்டம் ஏதுவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று விளக்கம் கொடுத்தது.
மத்திய அரசு ஜூலை 1, 2025 முதல் DA மற்றும் DR அளவை 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
8வது சம்பள கமிஷன் பரிந்துரை 2026 ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 30-34 சதவீத ஊதிய உயர்வு வரலாம் என்று நிபுணர்கள் கணிக்கித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications