மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் வேகம் எடுக்க தொடங்கி இருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைத்து ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்.
சம்பள கமிஷன் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்திவிட்டது. கடந்தாண்டு இறுதியில் தான் மத்திய அரசு சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்தது. மேலும் சம்பள கமிஷனுக்கான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்தது. இந்த சூழலில் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

https://8cpc.gov.in/ என்பது தான் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளம். இந்த இணையதளத்திற்கு சென்று மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கமிஷன் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அரசு வழிவகை செய்திருக்கிறது. இதில் சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்களின் விவரங்களும் அரசு வழங்கியிருக்கும் குறிப்புரைகள் என்னென்ன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
மிக முக்கியமாக இதில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் 18 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாலும் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை கிளிக் செய்து மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு அமைச்சகங்களும், அரசு ஊழியர்களுக்கான யூனியன்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் இதில் தங்களுடைய பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Mygov.in என்ற இணையதள பக்கத்தில் இந்த 18 கேள்விகள் அடங்கிய லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்து நம்முடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். பல்வேறு அமைச்சகங்கள், பல்வேறு துறைகள் , மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் , அரசு ஊழியர்கள் , அரசு ஊழியர்களுக்கான யூனியன்கள் , ஓய்வூதியதாரர்கள் மற்றும் தனி நபர்கள், கல்வியாளர்களும் தங்களுடைய கருத்துக்களை அதில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் கருத்து பதிவு விடக்கூடிய நபர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் சம்பள கமிஷன் தன்னுடைய முடிவுகளை எடுக்கும் என கூறப்பட்டிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி வரை இதில் தங்களுடைய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வழங்கலாம்.
எந்த மாதிரியான ஃபிக்மன்ட் ஃபேக்டர் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் , ஒரு அரசு ஊழியருக்கான சம்பளம் எதை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள், ஊதிய உயர்வு அனைத்து பே ஸ்கேலுக்கும் ஒரே அளவாக இருக்க வேண்டுமா, பணவீக்கம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருக்கின்றன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications