இளம் தலைமுறையினர் பலர் தற்போது ஆர்வமாக மத்திய மாநில அரசு வேலையில் சேர ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் பல துறையில் தொடர்ந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களும், மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிதாக மத்திய அரசுப் பணியில் சேர்வோருக்கும் ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், இதர படிகள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளைத் திருத்தியமைக்க 8வது சம்பள ஆணையத்தை உடனடியாக அமைக்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு விரைவில் இதற்கான பணிகளைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி 3.0 ஆட்சியில் 8வது சம்பள கமிஷன் முக்கியமான விஷயமாக இருக்கப்போகிறது. இதனால் மத்திய அரசிடம் இருந்து இதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது.
பொதுவாக பத்து வருடத்திற்கு ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பைப் பரிசீலனை செய்து, தேவையான மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக மத்திய சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. இதில் பணவீக்கம் போன்ற முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும்.
ஏழாவது சம்பள கமிஷன் 2014 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் அமைக்கப்பட்டது. இக்குழு 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது, மேலும் 7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தன.
எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும்?: சம்பள கமிஷன் அமைப்பதில் பத்து வருட இடைவெளி இருப்பதால், அடுத்த ஊதியக் கமிஷன் அதாவது 8 வது மத்திய சம்பள கமிஷன் - 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், 8வது மத்திய சம்பள கமிஷன் அமைப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவடைந்து மோடி 3.0 ஆட்சி மீண்டும் அமைந்த நிலையில், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் எட்டாவது சம்பள கமிஷன் குறித்த தகவல்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
எட்டாவது சம்பள கமிஷன் ஏன் அவசியம்?: எட்டாவது சம்பள கமிஷன் அமைக்க அவசரத் தேவை இருப்பதற்கான காரணங்களைத் தேசிய குழு மத்திய செயலாளர் (staff side, Joint Consultive Machinery for central government employees) சிவ கோபால் மிஸ்ரா மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
பணவீக்கம் 4% முதல் 7% வரை இருக்கும் என்றும், சராசரியாக 5.5% இருக்கும் என்றும் மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், கோவிட்-19க்குப் பிந்தைய பணவீக்கம் கோவிட்-19க்கு முந்தைய நிலையை விட அதிகமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலை நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், அவை 80% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
ஆனால், 01/07/2023 நிலவரப்படி சுமார் 46% அகவிலைப்படி மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, உண்மையான விலை உயர்வுக்கும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படிக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை 8வது சம்பள கமிஷன் அளவீட்டில் சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications