8ஆவது சம்பள கமிஷன விடுங்க, ஜனவரி மாசம் அகவிலைப்படி உயர்வு இருக்குமா? குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!!

டெல்லி: இந்தியாவை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஒன்றரை ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் என்பதால் எப்போது முதல் புதிய சம்பளம் கிடைக்கும் என்ற குழப்பத்தில் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் வரை தற்போது உள்ளதைப் போலவே அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுமா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.

8ஆவது சம்பள கமிஷன விடுங்க, ஜனவரி மாசம் அகவிலைப்படி உயர்வு இருக்குமா? குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!!

அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சம்பள கமிஷன் மூலம் சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அவர்களுக்கு நாட்டின் விலைவாசி மற்றும் பண வீக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி என்பது வழங்கப்படுகிறது . இந்த அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக வழங்கப்படும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகை அகவிலை படியாக கிடைக்கிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களுக்கு எழுந்திருக்கிறது. ஆனால் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்து அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் வரை உங்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி தொடர்ந்து கிடைக்கும் .

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை போலவே அகவிலைப்படி என்பது அறிவிக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படும் என Nexdigm என்ற நிறுவனத்தின தலைவரான ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.எட்டாவது சம்பள கமிஷன் எந்த தேதியில் நடைமுறைக்கு வருகிறதோ அப்போதுதான் உங்களுக்கான அகவிலைப்படி என்பது 0 சதவீதம் என்ற நிலைக்கு வரும். அதன் பின்னர் அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அரசு அகவிலைப்படியை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கும் என கூறுகிறார்.

எனவே வரும் ஜனவரி மாதம் நிச்சயமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபரில் அகவிலைப்படி 3% என உயர்த்தப்பட்டது. இப்போது 58%ஆக அகவிலைப்படி உள்ளது. வரும் ஜனவரியில் அகவிலைப்படி மேலும் 2 முதல் 3% வரை உயர்த்த வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+