8வது சம்பள கமிஷன்: உண்மையில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 69000 ரூபாயாக உயர்கிறதா?

8வது சம்பள கமிஷன் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 69000 ரூபாயாக உயரும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் இது சாத்தியமாக வேண்டும் என்றால் பிட்மென்ட் பேக்டர் 3.833 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் இது சாத்தியமாகுமா என்பது தான் தற்போதைய மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. மத்தய அரசு ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில் தற்போது சந்தையில் நிலவும் விலைவாசி, Living expense அடிப்படையில் தான் இத்தகைய பிட்மென்ட் பேக்டரை கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

8வது சம்பள கமிஷன்: இது மட்டும் நடந்திட்டா போதும்.. மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கையே மாறிடும்!

இந்த மாற்றம் மட்டும் நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு பணிகளில் இருக்கும் கீழ் நிலை ஊழியர்களுக்கும் பெரிய அளவிலான நன்மை கிடைக்கும் என்பதால் அனைத்து தரப்பு ஊழியர்கள், பிரிவினர் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வல்லுனர்களும் 8வது சம்பள கமிஷன் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்துள்ளனர், அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டால் நாட்டின் பெரும் பகுதி குடும்பத்தினரிடம் கூடுதலான நிதி புழக்கம் கிடைக்கும், இது நுகர்வோர் சந்தையில் புதிய பலமாக மாறும், வர்த்தகம் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

மேலும் 8வது சம்பளம் கமிஷனின் பிட்மென்ட் அளவு குறித்து ஊழியர்கள் பிரிவான National Council-Joint Consultative Machinery (NC-JCM) கூறுகையில் அரசு ஊழியர்களின் இன்றைய செலவுகளையும், விலைவாசி அளவுகளையும் முந்தைய சம்பள கமிஷனில் ஆய்வு செய்யப்பட்ட முறை தற்போது முற்றிலும் பொருந்தாமல் உள்ளது.

எனவே 8வது சம்பள கமிஷனில் இதற்கு தீர்வு காணவும் அரசு ஊழியர்கள் வருவாய் இழப்பை ஈடு செய்ய fitment factor 3.833 ஆகவும், பரிந்துரை செய்யப்பட்டு உள்ள புதிய கணக்கிட்டு முறையை அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

பொதுவாக சம்பள கமிஷனில் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தப்பட்ச அடிப்படை சம்பள அளவீடு தான் அனைத்து அனைத்து ஊழியர்களின் சம்பளத்திலும் எதிரொலிக்கும். இதனால் இதை சரியாக கட்டமைப்பது மிகவும் அவசியம் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் அடிப்படை சம்பளம் தான் கொடுப்பனவும், கிரேட் பே என பலவிஷயங்கள் சேரும் போது ஒரு மத்திய அரசு ஊழியரின் சம்பளம் 8வது சம்பள கமிஷன் மூலம் 2.5 லட்சத்தை எளிதாக தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 8வது சம்பள கமிஷனில் முக்கியமான ஒரு அளவுகோள் முன்வைக்கப்பட்டு உள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 18000 ரூபாய் அளவீடு fitment factor 3.833 ஆக நிர்ணயம் செய்யும் போது 69000 ஆக உயரும். NC-JCM அமைப்பு இதே அடிப்படையில் பென்ஷன் அளவீட்டையும் கணக்கிட வேண்டும் என அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+