மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குவதற்காக மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனை அமைத்திருக்கிறது. எட்டாவது சம்பள கமிஷன் தற்போதுள்ள விலைவாசி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை எல்லாம் ஆய்வு செய்து தன்னுடைய பரிந்துரையை அரசுக்கு வழங்கும் . அரசு அதனை ஏற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தையும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையும் உயர்த்தி வழங்கும் .
வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து புதிய சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷனே இப்போது தான் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே சம்பள கமிஷன் பரிந்துரை கொடுத்து அரசு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். இந்த நிலையில் தான் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கின்றன .

மத்திய அரசு எப்படி ஊழியர்களுக்கு ஆண்டுக்கான 2 முறை அகவிலைப்படி வழங்குகிறதோ அதேபோல ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை நிவாரணம் வழங்குகிறது. இது அவர்களின் அடிப்படை ஓய்வூதிய தொகையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 58% அகவிலைப்படியை பெறுகின்றனர், ஓய்வூதியதாரர்கள் 58% அகவிலை நிவாரணத்தை பெறுகிறார்கள்.
7ஆவது சம்பள கமிஷன் வரும் டிசம்பர் இந்த மாதத்தோடு முடிவடைகிறது. புதிய சம்பள கமிஷனின்படி புதிய ஓய்வூதியத் தொகை நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்தில் தங்களுக்கு அகவிலை நிவாரணம் கிடைக்குமா, அரசு எப்பொழுதும் போல ஆண்டுக்கு இரண்டு முறை இதனை உயர்த்துமா? என்ற குழப்பத்திலும் இருக்கின்றனர் ஓய்வூதியதாரர்கள். இது தொடர்பாக எக்கனாமிக்ஸ் டைம்ஸுக்கு பேட்டி கொடுத்திருக்கும் மத்திய அரசு அதிகாரி ஏழாவது சம்பள கமிஷன் முடிவடைந்தாலும் புதிய சம்பள கமிஷன் படி புது சம்பளம் நடைமுறைக்கு வரும் வரை அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை படியையும் அகவிலை நிவாரணத்தையும் உயர்த்தி வழங்கும் எனக் கூறுகிறார்.

எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அகவிலை நிவாரணம் இனி கிடைக்காதா என்ற குழப்பமே தேவையில்லை என கூறி இருக்கிறார் . ஓய்வூதியதாரர்கள் வழக்கம் போல ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் வரை அகவிலை நிவாரணத்தை பெறுவது உறுதி . அப்படி பார்க்கும்போது சம்பள கமிஷன் நடைமுறை வருவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது என வைத்துக் கொண்டால் 2026 ஜனவரி, 2026 ஜூலை ,2027 ஜனவரி ,2027 ஜூலை என நான்கு அகவிலை நிவாரணம் கிடைக்கும் .
தற்போது ஒரு ஓய்வூதியதாரர் 25 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஓய்வூதியமாக பெறுகிறார் என்றால் தற்போது அவருக்கு 58% அகவிலை நிவாரணமாக கிடைக்கும் அப்படி பார்க்கும் போது 39 ஆயிரத்து 500 ரூபாயை அவர் நிவாரணமாக பெறுகிறார். புதிய ஓய்வூதிய தொகை நடைமுறைக்கு வரும் வரை இந்த அகவிலை நிவாரணம் உயர உயர இவருக்கான ஓய்வூதிய தொகையும் உயரும் .
8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி புதிய ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய மாதத்தில் இந்த அகவிலை நிவாரணம் என்பது பூஜ்ஜியமாக மாறிவிடும் . நாடு முழுவதும் தற்போது 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்கள் அரசு ஊழியர்களை விட இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஏழாவது சம்பள கமிஷனின்படி குறைந்தபட்சம் 9,000 ரூபாயும் அதிகபட்சம் 1,25,000 ரூபாய் ஓய்வூதிய தொகையாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது .
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications