வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் அதே வேளையில் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அமெரிக்கர்கள் ஒன்பது பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே எம்பிக்களாக இருந்து மீண்டும் போட்டியிடுகின்றனர்.
சுஹாஸ் சுப்பிரமணியன், 38 வயதான இவர் அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தேர்வு செய்யப்பட்டால் இந்த மாகாணத்தில் எம்பியாக தேர்வாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். ஜ

Suhas Subramanyan: ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் சுஹாஸ் சுப்பிரமணியன் தற்போது விர்ஜீனியாவின் செனட்டராக பதவி வகித்து வருகிறார். விர்ஜீனியாவில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என தெரிய வருகிறது.
இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் புகழ்பெற்ற பெயர்தான் சுஹாஸ் சுப்பிரமணியன். இவர் இதற்கு முன்பு ஒபாமா அதிபராக பதவி வகித்த போது வெள்ளை மாளிகையின் ஆலோசகராக பணிபுரிந்து வந்தவர்.
Dr Ami Bera: மருத்துவர் அமீ பெரா 59 வயதான இவர் கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் . பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மை பெற்றால் அமீ பெராவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Pramila Jayapal: பிரமீளா ஜெயபால், ஜனநாயக கட்சியில் சக்தி வாய்ந்த ஒரு தலைவராக இவர் பார்க்கப்படுகிறார். இவர் மீண்டும் மீண்டும் வாஷிங்டனில் இருந்து தேர்தலில் களம் காண்கிறார். இவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என சொல்லப்படுகிறது.
Raja Krishnamoorthi, Ro Khanna: அதேபோல இல்லினாய்ஸ் மாகாண பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரக்கூடிய ராஜகிருஷ்ணமூர்த்தியும், கலிபோர்னியாவின் ஏழாவது பிரிவிலிருந்து செயல்பட்டு வரக்கூடிய ரோ கண்ணாவும் மீண்டும் தேர்தலில் களம் காண்கின்றனர்.
Shri Thanedar: மிச்சிகன் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய 69 ஆன வயதான ஸ்ரீ தனேதர் மீண்டும் வெற்றி பெறுவார் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Dr Amish Shah: அரிசோனா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2018 , 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்ற மருத்துவர் அமிஸ் ஷா தற்போது அரிசோனாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் களம் காண்கிறார்.
Dr Prasanth Reddy: கன்சாஸ் மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பாக களம் காண்பவர் தான் டாக்டர் பிரசாந்த் ரெட்டி . மூன்று முறை இந்த பகுதியில் வெற்றி பெற்ற டேவிட்சை எதிர்த்து இவர் தேர்தலில் நிற்கிறார்.
Dr Rakesh Mohan: டாக்டர் ராகேஷ் மோகன் நியூ ஜெர்சி பகுதியில் இருந்து குடியரசு கட்சி சார்பாக பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் களம் காண்கிறார். டாக்டர் பிரசாந்த் ரெட்டி மற்றும் டாக்டர் ராகேஷ் மோகன் இருவரும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சற்றே குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் 6 பேரும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதென கணிப்புகள் கூறுகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications