பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மொத்தம் 50.09 கோடி பயனாளிகளைக் கொண்ட இந்த ஜன் தன் திட்டம் கடந்த மார்ச் 2015 இல் 14.72 கோடியாக இருந்தது.
அனைத்து குடிமகன்களுக்கும் வங்கி சேவை எளிதாகக் கிடைக்கும் வகையில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. 2023 ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் இந்த பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல நன்மைகள் விளைந்துள்ளன.

இதுபற்றி மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைத் துறை செயலாளர் விவேக் ஜோஷி கூறுகையில் கடந்த ஆண்டுகளில் இந்த ஜன் தன் திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்துள்ளது என்றார்.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.2.03 கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 2015இல் இது ரூ.15,670 கோடியாக இருந்தது.
2015 ஆம் ஆண்டில் ஒரு ஜன் தன் திட்டக் கணக்கில் சராசரியாக இருந்த ரூ.1,065 இப்போது ரூ.4,063 ஆக உயர்ந்துள்ளது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டன. மொத்தக்கணக்கில் இது 58 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உள்ளது. ஜன் தன் திட்டம் 50 கோடி கணக்குக்கும் மேலாக வந்த மறுநாள் அரசுச் செயலர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதில் 67 சதவீத கணக்குகள் கிராமப்புறம் மற்றும் புறநகர்களைச் சேர்ந்தவர்கள் தொடங்கியது என்றார்.
வங்கிச்சேவை, சேமிப்பு, டெபாசிட் அக்கவுன்ட்கள், பணம் செலுத்துதல், கிரெடிட், இன்ஸ்சூரன்ஸ், பென்ஷன் போன்ற வசதிகளை நாட்டிலுள்ள அனைவருக்கும் எளிதாகப் போய் சேர்வதற்காக மத்திய அரசு இந்த ஜன் தன் திட்டத்தை செயல்படுத்தியது.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கமே பைனான்ஸ சேவைகள் எல்லாருக்கும் குறைந்த கட்டணத்தில் போய் சேர வேண்டும் என்பதுதான். தொழில்நுட்பத்தின் உதவியுடன் செலவீனங்களை கட்டுப்படுத்தி விரிவுபடுத்தப்படுகிறது. பேங்கிங், அன்பேங்கிங், அன்செக்யூர்டு பண்டிங் ஆகிய மூன்று அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மக்களை மையமாக வைத்து செயல்படக்கூடிய இந்த ஜன் தன் திட்டம் நேரடி பலன்களை மாற்றுவது, கோவிட் பாதிப்பை எதிர்கொள்வதற்கான நிதியுதவி, கிசான் நலத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications