துபாய்: ஹவாய் செப்பல் 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத பொருட்களில் ஒன்று. நமது கிராமங்களிலும் நமது தாத்தா பாட்டி என பலரும் இந்த ஹவாய் செருப்பை அணிந்திருப்பதை பார்த்து தான் நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். ஏன் நாமே கூட சிறுவயதில் இந்த செருப்பை அணிந்திருக்கிறோம்.
தற்போது என்னதான் புதுப்புது மாடல்களில் புதுப்புது நிறுவனங்களின் செருப்பு, ஷூ உள்ளிட்டவை வந்திருந்தாலும் இத்தகைய ஹவாய் செருப்பினை பார்க்கும்போது நம்மை அறியாமலேயே நமக்கு பழைய நினைவுகள் ஏற்படும். அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி 90ஸ் கிட்ஸ் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் ஹவாய் செருப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெள்ளை நிறத்தில் ப்ளூ நிற ஸ்டிராப் கொண்ட இந்த செருப்பு இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது.
இந்திய சந்தைகளில் இது குறைந்த விலையிலேயே கிடைக்கும் சூழலில் சவுதி அரேபியாவில் 4,500 ரியால் அதாவது இந்திய ரூபாயில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ஏராளமானவர்கள் தங்களுடைய நினைவுகளையும் இதில் தற்போது உள்ள தொழில் வாய்ப்பு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியர்கள் இந்த தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 100 ரூபாய்க்கு இங்கே செருப்பினை வாங்கி அதனை சவுதியில் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். இதன் மூலம் நாம் செய்யும் 100 ரூபாய் முதலீடுக்கு ஆயிரம் மடங்கு லாபம் கிடைக்கும் என ஒரு பயனாளர் தெரிவித்துள்ளார். பலரும் ஹவாய் செருப்பு குறித்த தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் பின்னூட்டங்களாக பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு நபர் சிறிய வயதில் என்னை அடிக்க அம்மா பயன்படுத்திய ஆயுதமே இந்த செருப்பு தான் எனக் கூறியுள்ளார். தற்போது இந்த செருப்பினை யாரும் பயன்படுத்துவதே இல்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.
ஒரு பயனாளர் என்னுடைய குழந்தை பருவத்தில் ஷூ வாங்க முடியாத காலத்தில் நான் ஹவாய் செருப்பினை அணிந்து கொண்டு தான் பள்ளிக்கு சென்று வந்தேன் என கூறியுள்ளார். பலரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் ஹவாய் செருப்பு உடனான தங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications