பொதுவாக காய்கறி மொத்த வியாபாரம் செய்பவர்கள் அதற்கென நகருக்குள் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட சந்தைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடை வைப்பது வழக்கம். இவர்கள் வாடகை அடிப்படையில் காய்கறி கடை எடுத்து அதில் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் தினசரி சந்தைகளும் உள்ளன. வார சந்தைகளும் உள்ளன. அங்கு மக்கள் அதிகம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடம், கூட்ட நெரிசல் என பல்வேறு சிக்கல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய முயற்சியை எடுத்துள்ளனர். அதற்காக கோவை மாவட்ட காய்கறி விற்பனையாளர் சங்கத்தினர் கூட்டாக சேர்ந்து நிலம் வாங்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், வியாபாரிகள் சங்கத்திலுள்ள 90 வியாபாரிகள் சேர்ந்து திருமலையாம்பாளையம் என்ற இடத்தில் 9.5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இதில் 89 கடைகள் வைக்கக்கூடிய அளவிற்கு மொத்த காய்கறி சந்தையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் என்ற இடத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த மொத்த காய்கறி விற்பனை சந்தையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் இந்த வியாபாரிகள் உருவாக்க உள்ளனர். இப்போது, கோயம்புத்தூரில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி வியாபாரிகள் ஒன்றிணைந்து புதிய காய்கறி சந்தையை உருவாக்குவதற்கு நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநரகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த திட்டம் குறித்து கோவை டவுன்ஹாலில் அமைந்துள்ள டிகே மார்க்கெட்டின் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.ராஜேந்திரன் தெரிவிக்கையில், கோவை மாவட்டம் திருமலையம்பாளையத்தில் 9.5 ஏக்கர் நிலத்தை எம்ஜிஆர் மார்க்கெட்டில் 50 பேர் மற்றும் டிகே மார்க்கெட்டில் 40 பேர் என 90 பேரும் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும், இதில் 89 கடைகள் அமைக்கும் வகையில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் சந்தையை மேம்படுத்த திட்டமிருப்பதாகவும், இதில், நிலத்தடி வடிகால் அமைப்பு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளையும் தங்கள் சொந்த நிதியில் மேம்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த கடைகளை கட்ட நகராட்சி மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகத்தின் அனுமதி பெற காத்திருப்பதாகவும், இதற்காக மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், அப்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமீபத்தில் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கு விரைவில் அனுமதி கிடைப்பதற்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இருந்து கர்நாடகாவின் மைசூர், தமிழகத்தில் ஒட்டன்சத்திரத்துக்கும் காய்கறிகள் அதிகளவில் விற்பனை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளதால், எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு வாகனங்கள் செல்வது பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சந்தையில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்யும் சில்லறை வியாபாரிகள், வாகனங்களை நிறுத்துவதற்கும், காய்கறிகளை ஏற்றுவதற்கும் சிரமப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், கோவை மாவட்டத்தில் கேரளாவில் உள்ள வியாபாரிகளுக்கு காய்கறி விற்பனை செய்பவர்கள் அருகிலுள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள கடைகளை காலி செய்துவிட்டு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோயம்புத்தூரில் உள்ள மொத்த மார்க்கெட்டுகள் நகருக்குள் இருந்ததால், காய்கறிகளை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் போதிய இடவசதி இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்
எனவேதான், காய்கறி விற்பனையாளர் சங்கத்தினர் நகருக்கு வெளியே ஒரு மொத்த சந்தையை உருவாக்க முன்முயற்சி எடுத்ததுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் தாமதமின்றி தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications