உலகின் 90 வருட பழமையான அழகு நிறுவனம் திவாலாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Revlon என்ற 90 ஆண்டு கால அழகுசாதன நிறுவனம் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்துவந்த நிலையில் தற்போது திவால் நிலைக்கு விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அழகு சாதன பொருட்களை வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனம் கடுமையான கடனை எதிர்கொண்டு உள்ளதாகவும் அதிக பணவீக்கம் மற்றும் பணச்சிக்கல் காரணமாக இந்த நிறுவனத்தை தொடர்ந்து நிர்வகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Revlon நிறுவனம்
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி Revlon நிறுவனத்தின் சொத்துக்கள் 2.3 பில்லியன் டாலர் ஆக இருந்தது என்றும் ஆனால் இந்நிறுவனத்தின் கடன் 3.7 பில்லியன் டாலர் ஆக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திவால்
இதன் காரணமாக Revlon நிறுவனம் திவால் நிலையை தாக்கல் செய்துள்ளதாகவும் தனது கடனாளிகளுக்கு திருப்பி செலுத்துவதற்கான வழியை கண்டுபிடித்த பிறகு அதன் செயல்பாடுகளை தொடர முடிவு செய்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது நிறுவனத்தை கையாள்வதில் மிகவும் கடினமாக இருந்ததாகவும் பல ஆண்டுகளாக சந்தையில் புதியதாக அதிகமான பிராண்டுகள் நுழைந்ததால் போட்டியின் காரணமாக இந்நிறுவனத்தின் விற்பனை குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
நெயில்பாலிஷ்
1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Revlon நிறுவனம் நெயில்பாலிஷ் விற்பனை செய்வதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 1955 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது சுமார் 150 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
கடன்
இந்த நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனத்தின் தலைவர் பெரல்மேனின் மகள் டெப்ரா பெரல்மேனால் என்பவர் நடத்தி வந்தார் என்பதும் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் கடன் மிகப்பெரிய அளவில் ஆகிவிட்டதால் நிறுவனம் திவாலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்னி ஸ்பியர்ஸ்
ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கும் மேலாக நெயில்பாலிஷ் விற்பனையில் ஈடுபட்டு வந்த Revlon நிறுவனத்தின் தயாரிப்புகளை பிரபல ஹாலிவுட் நடிகை பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டினா உள்பட பலர் பயன்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications