இன்று ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்கள் இருந்தாலும், 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக குறிப்பாக குறிப்பாக இந்தியா இளைஞர்களிடையே பெரிய அளவில் பிரபலம் அடைந்த ஒரு தளம் ஆர்குட் (Orkut).
இந்தியாவில் பலருக்கும் தங்களுடைய முதல் சமுக வலைதள அக்கவுண்ட் ஆக இருந்த ஆர்குட் இத்துறையில் உருவான போட்டி காரணமாக தனது பிரபலத்தை இழந்து பேஸ்புக் பிரதான சோஷியல் நெட்வொர்க் ஆக மாறியது.

இந்த நிலையில் ஆர்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய ஆர்குட் புயுக்கொக்டென் (Orkut Büyükkökten), அந்தத் தளத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதுக்குறித்து டிவிட்டரில் செய்த பதிவில் அவர் மீண்டும் மனிதநேயமிக்க சமுக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்குட் வலைதளத்தைப் புதுப்பிக்க தான் விரும்புவதாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமுக வலைத்தளம் என்பது நமக்குப் பொருத்தமான மனிதர்களைக் கண்டறியவும், நட்பை வளர்க்கவும், சமூகத்துடன் இணைந்திருக்கவும், நமக்கான ஓர் இடத்தைக் கண்டறியவும் உதவ வேண்டும். ஆனால் தற்போதைய ஏஐ காலக்கட்டத்தில் இது மொத்தமாக மாறியுள்ளது.
எனவே ஆர்குட்-ஐ திரும்ப கொண்டு வர விரும்புவோர் ஆதரவு கொடுங்கள் என பெட்டிஷனில் கையெழுத்து போடும் ஒரு செயல்பாட்டை https://orkut.com என்ற தளத்தில் உருவாக்கியுள்ளார். இந்த தளத்தில் தனது திட்டம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
20 வருடங்களுக்கு முன்பு ஆர்குட் புயுக்கொக்டென் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய போது சமூக வலைதளங்களின் ஆரம்பக்கட்டத்தில் ஆர்குட்-ஐ உருவாக்கினார். இப்போது சமுக வலைத்தளம் என்பது தொலைவில் இருக்கும் மக்களை இணைக்கும் வகையில் இருந்தது.
ஆனால் 20 ஆண்டுகளாக, மக்களிடையே உண்மையான இணைப்பை உருவாக்குவதைவிட, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், புகழ் அடைய வேண்டும் என்பதற்காகவும் சமுக வலைத்தளத்தில் இருக்க வேண்டிய கட்டாயப்படுத்தும் வகையில் இத்தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆர்குட் புயுக்கொக்டென் தனது ஆர்குட் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்குட்டை மீண்டும் கொண்டுவருவதற்காக 2,94,755 பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications