பெரும்பாலானவர்கள் 55 வயதிலிருந்து 65 வயதுக்குள் பணியிலிருந்து ஓய்வு பெற்று விடுவார்கள். ஆனால் சில மனிதர்கள் தங்களது 90 வயதுக் காலத்திலும் ஓய்வுபெறுவதில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நாட்டின் வயதான பில்லியனர் பிரதாப் சி ரெட்டியைக் குறிப்பிடலாம்.
பிரதாப் ரெட்டிக்கு இப்போது 91 வயது ஆகிறது. இருப்பினும் ஓய்வெடுத்துக் கொண்டும் சொந்தம் நட்போடு பொழுதைக் கழிப்பதையும் விட்டுவிட்டு வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து பணிக்குச் செல்கிறார்.
அப்போலோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில்தான் டாக்டர் ரெட்டி கோடிக்கணக்கான சொத்துக்களை குவித்தார். அந்த நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.69,700 கோடியாகும்.
ரெட்டியின் குடும்ப இந்த லிஸ்டடு கம்பெனியில் 29 சதவீத பங்கை வைத்துள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய தொழில் வெற்றியை சாதித்த டாக்டர் ரெட்டி இப்போதும் தனது சென்னை அலுவலகத்துக்கு வாரத்தில் 6 நாள் சென்று அலுவல்களை கவனிக்கிறார். வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை.

காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை வேலை செய்கிறார். மற்ற ஊழியர்களைப் போலவே சகஜமாக வேலை பார்க்கிறார்.
காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வேலை செய்கிறார். மற்ற ஊழியர்களைப் போலவே சகஜமாக வேலை பார்க்கிறார்.இன்றைக்கு அவரது மிகப் பெரிய ஹெல்த்கேர் தொழிலை விரிவடையச் செய்து அதை முன்னின்று ரெட்டியின் 4 மகள்கள் நடத்தி வருகின்றனர்.
டாக்டர் பிரீத்தா ரெட்டி, சுனீதா ரெட்டி, ஷோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி ஆகியோர்தான் அவரது மகள்கள், இதில் அப்போலோ குரூப்பின் நிர்வாக இயக்குநராக பிரதாப் ரெட்டியின் மகள் பிரீத்தா ரெட்டி உள்ளார். எக்ஸிகியூட்டிவ் துணைத்தலைவர்களாக சுனீதா ரெட்டியும் ஷோபனா காமினேனியும் உள்ளனர். இணை நிர்வாக இயக்குநராக சங்கீதா ரெட்டி உள்ளார்.
தனது ரெண்டாவது தலைமுறையினரை வெற்றிகரமான, சாதனை விருது பெற்ற தலைவர்களாக உருவாக்கிய டாக்டர் ரெட்டி இப்போது தனது மூன்றாவது தலைமுறையினரும் தங்களுக்கென ஒரு சாதனையைப் படைக்கும் அளவுக்கு அவர்களை உருவாக்கி வருகிறார்.
டாக்டர் ரெட்டியின் இரண்டாவது தலைமுறையினரின் கீழ் அப்போலோ குரூப் 71 மருத்துவமனைகள், 5000 பார்மஸிகள், 291 பார்மஸி கேர் கிளினிக்குகள், டயாக்னாஸ்டிக் செயின், பிரசவ சேவைகள், டிஜிட்டல் ஹெல்த் போர்ட்டல் உள்பட 21 பிராண்டுகளின் சங்கமாக உருவெடுத்துள்ளது.
ஒரு புத்திசாலியான தொழில்முனைவர் என்பதோடு டாக்டர் ரெட்டி மிகக் கவனமாக அடுத்தகட்ட பரம்பரையினர் குறித்தும் திட்டமிட்டுள்ளார்.
அப்போலோ குரூப் வெற்றி மேல் வெற்றியை குவித்துக் கொண்டிருக்க வேண்டுமே ஒழிய ஏதோ பிழைப்பு நடக்கிறது என்று ஆகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக டாக்டர் ரெட்டி உறுதி செய்துள்ளார்.
அண்மையில் தனது பேரக்குழந்தைகளை சந்தித்த டாக்டர் ரெட்டி அவர்களது விருப்பம், பலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அதை வைத்து ஒவ்வொரு பேரன், பேத்திக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களது பொறுப்புகளைப் பிரித்துக் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications