உலகளவில் மட்டுமல்ல இந்தியாவிலும் டெக் துறை பணி நீக்கங்கள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டன. திடீரென நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் நீங்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள் என அறிவித்து விடுகின்றன. இந்த ஒரு மின்னஞ்சல் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகின்றன.
பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் தான் ஊழியர்கள் பணிநீக்கம் செய்கின்றன என கிடையாது , ஸ்டார்ட் அப் மற்றும் சிறு நிறுவனங்கள் கூட ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நீக்கத்தை தீவிர படுத்திருப்பது தான் தற்போது இளைஞர்களுக்கு பெரிய மனக் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் வேலை வாய்ப்பு என்பதே பாதுகாப்பற்றது என்ற ஒரு மனநிலையை கொண்டு வந்திருக்கிறது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 40 சதவீதம் பேரை ஒரே நாளில் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறதாம். பட்டய கணக்காளராக இருக்கும் அர்பித் கோயல் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெலீயிட்டுள்ள பதிவில், என்னுடைய நண்பர் ஒருவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய நிறுவனம் அண்மையில் 40 சதவீதம் ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்திருக்கிறது. இது ஒரு உண்மையான சம்பவம் என கூறியுள்ளார்.
அவர் 92 லட்சம் ரூபாய் சிடிசி கொண்டவர், பணிநீக்கங்கள் தற்போது அதிகரித்துவிட்டன எனக் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றிருக்கிறது. அதிகமான சிடிசி கிடைக்கிறது என்பதை நம்பி சென்றால் அங்கே பணி பாதுகாப்பு இல்லை என ஒரு நபர் பதிவு செய்திருக்கிறார். ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது லட்சக்கணக்கில் சம்பளத்தை தூக்கி கொடுக்கிறார்கள் என்பதற்காக நம்பி வேலைக்கு சேர்ந்தால் திடீரென ஒரு நாள் உங்களுக்கு வேலை இல்லை என கூறுகிறார்கள் என பலரும் இந்த நிறுவனத்தின் ஊழியர்களை கண்டு புலம்பி வருகின்றனர்.
இவ்வளவு அதிக சம்பளம் இருக்கக்கூடிய நபர், சம்பளம் நிறைய கிடைக்கிறதே என கோடிக்கணக்கில் வீடு வாங்கியிருப்பார் இந்த திடீர் வேலை இழப்பு அவருக்கு மிகப்பெரிய இஎம்ஐ சுமையை ஏற்படுத்தியிருக்கிறது என ஒரு நபர் பதில் அளித்துள்ளார். பெரும்பாலான நபர்கள் தங்களுடைய தற்போதைய சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டுதானே வங்கிகளில் வீட்டு கடன் உள்ளிட்டவற்றை வாங்குகிறார்கள் திடீரென அந்த சம்பளமே இல்லை எனும் போது நிலைமை மோசம் அடைந்து விடுகிறது என மற்றொருவர் கூறியிருக்கிறார்.
இதே நிறுவனத்தில் ஒரு பெண் பேறுகால விடுப்புக்காக விண்ணப்பம் செய்ய ஒரு வார காலம் இருந்தபோது பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அமித் கோயல் கூறியுள்ளார். பணிநீக்கங்கள் சம்பள இழப்பை மட்டுமல்ல மனதளவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என பலரும் அதில் பதில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications