அச்சச்சோ.. 93% CEO-க்கள் முடிவு இதுதானாம்.. ஊழியர்களே உஷார்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ந்து அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச பொருளாதாரம் என்பது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பெரும்பாலும் செயல்பாட்டு செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது.

 

எனினும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க விரும்பவில்லையாம். அதேபோல சம்பளத்தினையும் குறைக்க விரும்பவில்லையாம்.

 GDP: இந்திய பொருளாதாரம்.. பரபர கணிப்பு..! GDP: இந்திய பொருளாதாரம்.. பரபர கணிப்பு..!

 செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

இது குறித்து ஆலோசனை நிறுவனமான PwCல் World Economic Forum நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்களும் கூட, செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

10 ஆண்டுகளில் லாபம்

10 ஆண்டுகளில் லாபம்

இந்த ஆய்வில் 10ல் 4 தலைமை செயல் அதிகாரிகள்(உலகளாவிய 40% பேர் மற்றும் பதிலளித்தவர்களில் 41% பேர்) தற்போதைய பாதையில் தொடர்ந்தால் 10 ஆண்டுகளில், தங்கள் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி குறையும்
 

பொருளாதார வளர்ச்சி குறையும்

மேலும் அடுத்த 12 மாதங்களில் உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சுமார் 78% இந்திய தலைமை செயல் அதிகாரிகளும், 73% உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளும், 69% ஆசிய பசிபிக் தலைமை நிர்வாக அதிகாரிகளும் நம்புகின்றனர். ஆனால் இருண்ட உலகளாவிய கண்ணோட்ட, இருந்த போதிலும் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

பொருளாதாரம் மேம்படும்

பொருளாதாரம் மேம்படும்

அடுத்த 12 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து 10-க்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் 5-க்கும் மேற்பட்டோர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஒப்பிடுகையில் ஆசிய பசிபிக் தலைமை நிர்வாக அதிகாரிகளில் 37% பேரும், உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளில் 29% மட்டுமே, அடுத்த 12 மாதங்களில் தங்களது நாட்டின் அல்லது தங்களது பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கின்றனர்.

என்ன செய்யும்?

என்ன செய்யும்?


நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், தங்களது திட்டங்களில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக PwCல் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் நிலவி வரும் மோதல்கள் காரணமாக அடுத்த 12 மாதங்களுக்கு, தங்கள் நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67% இந்திய தலைமை செயல் அதிகாரிகள் தங்களது விநியோக சங்கிலிகளை சரிசெய்வதாகக் கூறியுள்ளனர்.

நிறுவனங்களின் திட்டம்

நிறுவனங்களின் திட்டம்

59% பேர் தங்களது சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பல்வேறு பிரிவுகளாக பல்வகைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதே 50% தங்களது முதலீடுகளை சைபர் செக்யூரிட்டிகள் மற்றும் தரவு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். 48% பேர் தற்போதைய சந்தைகளில் தங்களது இருப்பினை சரிசெய்வது மற்றும் புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்வது குறித்தும் யோசிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

யார் யாரிடம் ஆய்வு?

யார் யாரிடம் ஆய்வு?

தற்போதைய சூழகி 93% இந்திய தலைமை செயல் அதிகாரிகள் தங்களது செயல்பாட்டு செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளர்தாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வானது அக்டோபர் மற்றும் நவம்பர் 2022-க்கு இடையில் 105 நாடுகளில் 4410 தலைமை செயல் அதிகாரிகளிடம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் இருந்து 68 தலைமை செயல் அதிகாரிகளும் அடங்குவார்கள்.இவர்களிடம் பலரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

முக்கிய அச்சுறுத்தல்

முக்கிய அச்சுறுத்தல்

அடுத்த 12 மாதங்களில் இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட முக்கிய அச்சுறுத்தல்களில் பணவீக்கம், மேக்ரோ பொருளாதார ஏற்ற இறக்கம், கால நிலை மாற்றம் மற்றும் அரசியல் பதற்றங்கள் என பலவும் இதில் அடங்கும். சுமார் 60% புதிய கால நிலைக்கு ஏற்ற தயாரிப்புகள் அல்லது செயல்முறைகளை கண்டுபிடிப்பதாக கூறியுள்ளார்.

செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை


ஆக பல இடங்களில் செலவு குறைப்பு என்பது முன்னுரிமையாக உள்ளது. 93% இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகள், பொருளாதார சவால்கள் மற்றும் நிலையற்ற தன்மையை தணிக்க, இயக்க செலவுகளை குறைப்பதாகவும், வருவாய் வளர்ச்சியை தூண்டியதாகவும், குறைப்பதாகவும், குறைத்திருப்பதாகவும் அல்லது பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இழப்பீட்டை குறைக்க திட்டம்

இழப்பீட்டை குறைக்க திட்டம்

எனினும் இதில் நல்ல விஷயமே 85% பேர் தங்களின் பணியாளர்களின் அளவைக் குறைக்க மாட்டோம் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் 96% பேர் தக்கவைத்துக் கொள்வதற்கான தங்கள் உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இழப்பீட்டை குறைக்க திட்டமிடவில்லை என்று கூறியுள்ளனர்.

 பணியமர்த்தலை குறைக்க மாட்டோம்

பணியமர்த்தலை குறைக்க மாட்டோம்

எவ்வாறயினும் சுமார் 85% பேர் தங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க மாட்டோம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

உலகளாவிய பொருளாதார மந்த நிலை, தொடர்ந்து உயர் பணவீக்கம் மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் மோதல் போக்கு என இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான முன்கணிப்பு பெரும்பாலும் சாதகமானதாகவே உள்ளது.

வேகமாக வளரும்

வேகமாக வளரும்

உலக வங்கியின் கணிப்பின் படி இந்தியாவின் பொருளாதாரம் 2021 - 22ல் இருந்ததை காட்டிலும், 2022 - 23ல் குறைந்த வளர்ச்சியினை காட்ட கூடும். எனினும் நாட்டில் தேவை அதிகம் உள்ள நிலையில், இது மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

93% of indian CEOs plans to cut their operating costs: but no plan to layoffs or salaries

93% of indian CEOs plans to cut their operating costs: but no plan to layoffs or salaries
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X