அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹெச்1பி விசா மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விசாவுக்காக விண்ணப்பம் செய்த 96 சதவீதம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் குடியுரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக டிரம்ப்-ன் 4 வருட ஆட்சியில் இந்த ஜூன் காலாண்டில் தான் அதிகளவிலான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கக் குடியுரிமை அமைப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்கக் குடியுரிமை அமைப்பின் தணிக்கை அறிக்கை முக்கிய விவாத பொருளாக அமைந்துள்ளது.
விசா தடை
அமெரிக்க அதிபர் ஜூன் 22ஆம் தேதி வெளியிட்ட புதிய உத்தரவின் மூலம், ஜூன் 24, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரையில் அமெரிக்க அரசு எவ்விதமான விசா-வையும் வெளிநாட்டவர்களுக்குக் கொடுக்கப்படப் போவதும் இல்லை, விசாவுக்கான விண்ணப்பத்தையும் பெற போவதும் இல்லை என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளது டிரம்ப் அரசு.
இதற்குக் காரணமாக, கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால், அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
96 சதவீதம் விசா
விசா தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னர் ஜூன் காலாண்டுக்கான விசா விண்ணப்பத்தில் அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு எப்போதும் இல்லாத வகையில் சுமார் 95.5 சதவீதம் பேருக்கு விசா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது டிரம்ப் ஆட்சியிலேயே இந்த முறை தான் அதிகம் என United States Citizenship and Immigration Services தெரிவித்துள்ளது.
விசா ஒப்புதல்
United States Citizenship and Immigration Services அமைப்பு அக்டோபர் முதல் செப்டமர் நிதியாண்டு முறையைப் பின்பற்றும் நிலையில். முதல் காலாண்டில் 83.4 சதவீதமும், 2வது காலாண்டில் 87.1 சதவீதம் விசா விண்ணப்பங்கள் ஒப்புதல் அளித்த நிலையில் 3வது காலாண்டில் அதிகப்படியாக 95.5 சதவீதம் விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்கி அசத்தியுள்ளது அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு.
இந்த அதீத விசா ஒப்புதல் மூலம் அடுத்த 6 மாத விசா தடை காலத்தைப் போதிய வெளிநாட்டு ஊழியர்கள் மூலம் அமெரிக்கச் சந்தை ஈடுசெய்ய முடியும்.
டிரம்ப் கொள்கை
டிரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆனதே அவரின், 'Buy American Hire American' கொள்கையின் காரணமாகத் தான் எனப் பல அமெரிக்கர்கள் கூறும் நிலையில் 2016இல் விசா ஒப்புதல் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்த நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் சராசரியாக 85 சதவீதம் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது 95.5 சதவீத விண்ணப்ப ஒப்புதலுக்குப் பின் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications