மும்பை: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 97.82 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மே 30ஆம் தேதி நிலவரப்படி 7,755 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளிடம் வந்து சேரவில்லை என தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை குறைத்த ரிசர்வ் வங்கி படிப்படியாக் அதன் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி , 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தது.
மக்கள் வங்கிகளுக்கு சென்று 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்கியது. இந்த அறிவிப்பு வெளியான மே 19,2023 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடிகளாகும்.
தற்போது 2,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்திலேயே இல்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, மெ 31ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 7,755 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளிடம் வந்து சேரவில்லை என்றும் 97.82% நோட்டுகள் மீண்டும் தங்களிடம் வந்துவிட்டன என்றும் கூறியுள்ளது.
மீதமுள்ள நோட்டுகள் செல்லுபடி ஆகும் என்றும் இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் இந்தியா போஸ்ட் மூலம் ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
சென்னை, பெங்களூரு, அகமதாபாத், போபால், புவனேஸ்வர், சண்டிகர், கௌஹாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications