இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 27000 ஊழியர்கள் கடந்த 1.5 வருடத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். உலகளவில் இதன் எண்ணிக்கையை பார்த்தால் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நிலையில் இந்திய டெக் ஊழியர்களின் நிலை இனி வரும் காலக்கட்டத்தில் எப்படி இருக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இந்தியாவில் இருக்கும் சுமார் 98 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தக விரிவாக்கத்திற்கும், வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தவும் போதுமான முதலீட்டை திரட்ட முடியாத காரணத்தால் தான் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. தற்போது முதலீட்டு சந்தை மேம்பட்டு உள்ளது என பல முன்னணி நிறுவனங்கள் முதலீட்டை திரட்ட சென்றால் பெரும் அதிர்ச்சி கிடைத்தது.

2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் அமெரிக்க வங்கிகள் திவாலான காரணத்தால் முதலீடுகளை திரட்டுவது கடுமையான நிலையில், கடந்து ஒரு மாதத்தில் முதலீடுகளை திரட்ட திட்டமிட்ட பல நிறுவனங்களின் மதிப்பீடு குறைந்துள்ளது. இதனால் புதிதாக ஐபிஓ வெளியிட திட்டமிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது.
உதாரணமாக ஸ்விக்கி நிறுவனத்தின் மதிப்பு 10.7 பில்லியன் டாலரில் இருந்து 5.5 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டு உள்ளது. Byjus 22 பில்லியன் டாலரில் இருந்து 11 பில்லியன் டாலராக குறைப்பு, ஓலா 7.4 பில்லியன் டாலரில் இருந்து 4.8 பில்லியன் டாலராக குறைப்பு, OYO 9.6 பில்லியன் டாலரில் இருந்து 2.7 பில்லியன் டாலராக குறைப்பு, இந்த வரிசையில் PharmEasy, Pine labs-ம் வருகிறது.
இந்தியாவின் டாப் ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக இருக்கும் இந்த நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 29 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. இதனால் முதலீட்டை திரட்டும் பணிகளை தற்காலிகமாக பல நிறுவனங்கள் நிறுத்தியும், வேகத்தையும் குறைந்துள்ளது. இதனால் என்ன நடக்கும்..?

டாப் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு குறைந்துள்ள காரணத்தால் புதிய விரிவாக்கம் இருக்காது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாது, செலவுகளை குறைக்கும் பணிகளில் தீவிரம் காட்டப்படும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் வெளியேற்றப்படலாம், மூத்த அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்படுவது கட்டாயமாகும்.
இந்தியாவில் பணிநீக்கம் செய்த 98 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 22 எட் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பது மட்டும் அல்லாமல் இவை 9781 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதை தாண்டி 2023 ஆம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. Layoffs.fyi தளத்தில் தரவுகள் படி உலகளவில் சுமார் 695 டெக் நிறுவனங்கள் சுமார் 1.98 லட்சம் ஊழியர்களை இந்த ஆண்டு மட்டும் பணிநீக்கம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications