2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை முழுமையாகப் பெறவில்லை. நாட்டில் தற்போது ரூ.7117 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதை. அந்த நேரத்தில் வெளியிடப்பட்டதுதான் புதிய வடிவிலான ரூபாய் நோட்டுக்கள். அதில் ரூ.2000 நோட்டுக்களும் வெளியிடப்பட்டன. ஆனால், இது தொடரவில்லை. கடந்த மே 2023 இல் நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை அரசாங்கம் தடை செய்தது.

அதன் பிறகு மக்கள் 30 செப்டம்பர் 2023 வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அரசு வழங்கியது. இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை முழுமையாகப் பெறவில்லை. நாட்டில் தற்போது ரூ.7117 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் மக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.2000 நோட்டுகள் குறித்த அப்டேட்டை வழங்கிய ரிசர்வ் வங்கி, இதுவரை ரூ.2000 நோட்டுகளில் 98 சதவீதம் திரும்பி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 2024 இல் வெளிவந்த அப்டேட்: ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை 2024 இல் ரூ 2000 நோட்டுகள் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டது. அதில் ரூ 7581 கோடி மதிப்புள்ள ரூ 2000 நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்களில் ரூ.320 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. க்ளீன் நோட் கொள்கையின் கீழ், மே 2023 இல் நாட்டில் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் தங்கள் ரூ.2000 நோட்டுகளை அருகிலுள்ள வங்கி அல்லது நாட்டில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் சென்று மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ரூ.2000 நோட்டை மாற்றும் வாய்ப்பு: நீங்கள் இன்னும் ரூ.2000 நோட்டுகளை மாற்றமால் வைத்திருந்தால், சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர் ஆகிய 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிகொள்ளலாம். அதேபோல், புதுடெல்லி, பாட்னா, திருவனந்தபுரத்தில் ரூ.2000 நோட்டை மாற்றிகொள்ளலாம். இது தவிர, இந்தியா போஸ்ட் மூலமாகவும் மாற்றிகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications