99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் 99.8% தொழிலாளர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய முடியாத நிலையில் தான் உள்ளனராம். வெறும் 0.02% பேர் மட்டும் தான் வீட்டில் இருந்து பணி செய்ய ஏதுவானர்கள் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து SCIKEY Mind Match Report வெளியிட்டுள்ள அறிக்கையில், 99.8% தொழிலாளர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 95% வேலை தேடுபவர்கள் கற்றல் மற்றும் ஆராய்வதை எதிர்க்கிறார்களாம்.

H-1B விசா இந்தியர்களை விரட்டும் கொரோனா! லே ஆஃப் செய்யப்பட்டால் இத்தனை பிரச்சனைகளா?H-1B விசா இந்தியர்களை விரட்டும் கொரோனா! லே ஆஃப் செய்யப்பட்டால் இத்தனை பிரச்சனைகளா?

99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match!

இதே 65 சதவீதம் பேர் நடைமுறை தகவல் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்களாம். இதே 71 சதவீதம் பேர் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அனைத்து அமைப்புகளும் நிறுவனங்களும் ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணிபுரிய ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில் மேற்கொண்ட ஆய்வில் 16.97% ஊழியர்கள் பல சவால்களை மேற்கொள்கிறார்களாம். அத்தகைய ஊழியர்களுக்கு சவாலான பணிகள் வழங்கப்பட்டாலும், குறைந்தபட்ச தலையீட்டால் வேலை செய்ய முடியுமாம்.

ஆனால் இதே 17 சதவீத ஊழியர்களுக்கு தெளிவான அறிவுத்தல் அல்லது உந்துதல் தேவைப்படுகிறதாம். இந்த ஆய்வு சுமார் 10,559 பேரிடம் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இவர்களில் முக்கியமானவர்கள் மென்பொருள் உருவாக்குநர்கள், ஐடி உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப ஆதரவு, பொறியாளர்கள், வணிக மேம்பாடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், யுஐ/ யுஎக்ஸ் பொறியாளர்கள் போன்ற பல்வேறு களங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் என பலர் இந்த லிஸ்டில் உள்ளனர்.

இதில் 22 முதல் 47 வயது வரை உள்ள ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையானது மஹராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, டெல்லி, உத்திர பிரதேசம், கேரளா, ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த அறிக்கை பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையானது தனி நபர்களின் உணர்ச்சி பூர்வமான அளவு, அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கை நிலைகள், பழக்க வழக்கங்கள், தொழில்முறை வாழ்க்கையில் கவனச் சிதறல்கள் மற்றும் மன அழுதத்தினையும் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஆக சரியான வழிகாட்டுதல் இருந்தால், எந்தவொரு தனி ஊழியரும் சரியாக வேலை செய்ய முடியும். அவர்களை வழி நடத்துபவர்கள் சரியாக வழி நடத்தினால் போதும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

99.8% of the workers are incapable of work from home

SCIKEY Mind Match Report said that 99.8 percent of the workforce are incapable of working from home and only 0.02% is Work from Home Champions and showcase highly productivity attributes.
Story first published: Friday, April 10, 2020, 22:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X