நியூஜெர்சி: பொதுவாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் நல்ல படிப்பு , நிறைய பணம் தேவைப்படுகிறது என கருதப்படும் நிலையில் அது எதுவுமே தேவையில்லை என நிரூபணம் செய்துள்ளார் குஜராத்தை சேர்ந்த ஒரு நபர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மட்டுமே பயின்று முடிந்த ஒருவர் அமெரிக்காவில் மிகப்பெரிய உணவகத்தை நடத்தி பணக்காரராக உயர்ந்திருக்கிறார். எக்ஸ் பக்கத்தில் சுனில் என்ற பயனாளர் தன்னுடைய குஜராத் மாநில நண்பர் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அதாவது தன்னுடைய குஜராத்தை சேர்ந்த நண்பர் அமெரிக்காவிற்கு குடிபெயர்த்து அங்கே ஒரு குஜராத்தி உணவகத்தை தொடங்கி இருக்கிறார் .தற்போது இந்த உணவகம் அவரை பணக்காரன் ஆக்கிவிட்டது எனக் கூறியுள்ளார்.
ஏராளமானவர்கள் எம்பிஏ உள்ளிட்ட பெரிய பெரிய பட்ட படிப்புகளை முடித்துவிட்டு தொழிலில் வெற்றி பெற முடியாமல் தவிக்கும்போது பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்த இவர் அமெரிக்காவில் சென்று உணவகம் நடத்தி மிகப்பெரிய நபராக உருவெடுத்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக சுனில் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"படேல் என்ற என்னுடைய குஜராத்தி நண்பரை சந்தித்தேன்.அவருக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது. அவர் பத்தாம் வகுப்பு மட்டும் தான் முடித்திருக்கிறார் ஆனால் தற்போது நியூ ஜெர்சியில் அவர் உணவகம் நடத்தி அதன் மூலமே பல லட்சங்களை வருமானமாக ஈட்டி வருகிறார்" என கூறியுள்ளார்.
இது தொடர்பாக பட்டேல் அவர்களிடம் பேசிய போது 50 குடும்பங்கள் தினமும் அவரது உணவகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர் என கூறினாராம். குறிப்பாக தன்னுடைய வாடிக்கையாளர்கள் தன்னுடன் நண்பர்கள் போல பழகுவார்கள், உணவில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை தெரிவிப்பார்கள், அதற்காக அடுத்த நாள் வராமல் விட்டு விட மாட்டார்கள் என்றும் பட்டேல் கூறினாராம்.
குறிப்பாக இதுபோன்ற உணவக தொழில்களை நிறுவும் போது நாம் எந்த இடத்தில் அதனை தொடங்குகிறோம் என்பது முக்கியம் என அறிவுரை வழங்கினாராம். நியூ ஜெர்சியில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற கோயிலுக்கு அருகில் கடையை நிறுவி இருப்பதால் நியூயார்க் மற்றும் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருகை தருவார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கே வந்து இந்திய உணவை ருசிக்காமல் செல்ல மாட்டார்கள் என தெரிவித்தாராம்.
தினமும் காலையில் எழுந்து சாவல், ரொட்டி, சப்ஜி, தோக்ளா உள்ளிட்டவற்ற தயாரித்து தன்னுடைய கடையில் விற்பனை செய்து வரும் இவர் 10 ஆண்டுகளிலேயே பெரும் பணக்காரராக உருவாகியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications