ஆந்திரா: ஒரு சின்ன ஐடியா தான் நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து விடுகிறது. அப்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் தன்னுடைய ஒரு சின்ன யோசனை மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
நாம் தேநீர் அல்லது காபி குடிக்கும் போது பெரும்பாலும் பிளாஸ்டிக் குவளைகளை தான் பயன்படுத்துகிறோம். அது சுற்றுச்சூழலுக்கும் நம்முடைய உடல் நலனுக்கும் கேடாக அமைந்துவிடுகிறது. நான் பொதுவாக கோன் ஐஸ்கிரீம் வாங்குகிறோம் , ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு அந்த கோனையும் நாம் சாப்பிடுகிறோம் அல்லவா இதே போன்ற ஒரு கான்செப்ட் தான் உண்ணக்கூடிய தேநீர் குவளைகள்.

இதன் மூலம் தேநீர் அருந்துவதற்காக நாம் பிளாஸ்டிக் குவளைகளை பயன்படுத்தும் போக்கு பெருமளவில் குறையும் இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். இதுதான் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமியின் யோசனை. இந்த யோசனைக்கு வடிவம் கொடுத்து தற்போது மிகப்பெரிய அளவில் சாதித்து சுற்றுச்சூழலுக்கும் நன்மை புரிந்து வருகிறார்.
ஆசிரியராக இருந்து தற்போது சுய தொழில் முனைவோராக மாறி இருக்கக்கூடிய ஜெயலட்சுமி உண்ணக்கூடிய வகையிலான குவளைகளை தயாரித்து வருகிறார் . ராகி மற்றும் அரிசி மாவினை கொண்டு தயாரிப்பது தான் இந்த குவளைகளின் சிறப்பு. கிட்டதட்ட இரண்டு மாத காலம் பல்வேறு முயற்சிகளை செய்து தான் இந்த குவளைகளை தயாரித்ததாக அவர் கூறுகிறார் .
மக்கள் பிளாஸ்டிக்கை உபயோகிக்க கூடாது அதற்கு மாற்றமான ஒரு தயாரிப்பைக் கொண்டு வரவேண்டும் அது மக்கள் உடல் நலனுக்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும் என்ற யோசனைதான் இந்த ராகி மற்றும் அரிசி மாவு குவளை உருவாக்கத்திற்கான காரணம் எனக் கூறுகிறார். தற்போது இவர் ஒரு மாதத்திற்கு 30,000 இல் இருந்து 40,000 குவளைகள் வரை உற்பத்தி செய்கிறார். இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார்.
ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் தான் இவர். திடீரென இவருடைய கணவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டது எனவே வேலையை விடுத்து வீட்டிலிருந்து அவரை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டானதாம். நிதி ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தபோதுதான் சுயதொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்.
மத்திய அரசின் சிறு தொழில் திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தான் இவர் முதலில் தொழிலை தொடங்கி இருக்கிறார். இவர் தயார் செய்யும் ராகி குவளைகள் 2.5 ரூபாயில் இருந்து 3.5 ரூபாய் வரை என குவளையின் அளவுக்கு ஏற்ப மாறுகிறது. ஒரு நாளைக்கு 3,000 முதல் 4000 குவளைகள் வரை இவருடைய நிறுவனம் தயாரிக்கிறது. ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா ,தமிழ்நாடு ,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த குவளைகளை அனுப்பி விற்பனை செய்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications