பெங்களூரை சேர்ந்த ஒரு ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் 40 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு டிகிரி படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு ஸ்மாலெஸ்ட் ஏஐ (Smallest AI) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிறுவிய சுதர்ஷன் காமத் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக பதிவு செய்திருந்தார். அதில் சாப்ட்வேர் இன்ஜினியர் பதவிக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் எங்கள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்காக விண்ணப்பம் செய்பவர்களை அவர்களின் படிப்பு அல்லது டிகிரி அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்யப் போவது கிடையாது என கூறியுள்ளார்.

அதாவது இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிகிரி படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளார். அதே வேளையில் தங்களை குறித்து 100 வார்த்தைகள் மட்டுமே கொண்ட அறிமுக குறிப்பையும், இதற்கு முன்பு சாப்ட்வேர் இன்ஜினியராக அவர்களின் வேலை குறித்த லிங்குகளையும் அனுப்பி வைத்தால் போதும் என கூறியுள்ளார்.
அவருடைய இந்த அணுகுமுறை சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. படிப்பு மற்றும் பின்னணியை பார்க்காமல் முதலில் திறமையை பரிசோதிக்க போகிறோம், திறமை அடிப்படையில் வேலை என்ற இந்த அறிவிப்பு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இது தொடர்பாக சுதர்ஷன் காமத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் எங்களுடைய ஸ்மாலெஸ்ட் ஏஐ நிறுவனத்தில் ஃபுல் ஸ்டாக் இன்ஜினியர் பணிக்கு நாங்கள் ஆள் தேடுகிறோம். 100 வார்த்தைகள் மட்டுமே கொண்ட உங்களைப் பற்றிய அறிமுகத்தையும், செய்து உங்கள் வேலை தொடர்பான லிங்குகளையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த வேலைக்கு கல்லூரி டிகிரி இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, பாரம்பரிய முறையில் ரெஸ்யூம் அனுப்ப வேண்டும் என்று அவசியம் இல்லை என கூறியுள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு கால பணி அனுபவம் இருந்தால் கூட போதும் என கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய இந்த பதிவு கிட்டத்தட்ட 3.5 லட்சம் பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது. ஒரு பயனர் எந்த கல்லூரியில் படித்தார், அவருடைய பின்னணி என்ன என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவருடைய வேலையை நிரூபிப்பதற்கான விவரங்களை மட்டுமே கேட்கிறீர்கள் நிச்சயமாக இது வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார். பெரிய நிறுவனங்களும் கூட இதே பாணியை பின்பற்ற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications