பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அலுவலகம் செல்வதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்டவற்றில் வாகனம் கிடைக்காததால் ஒரு நபர் போர்ட்டர் செயலி வாயிலாக தன்னைத்தானே அலுவலகத்திற்கு டெலிவரி செய்து கொண்ட சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அலுவலகத்திற்கு செல்லும் பலரும் வாடகை முறையில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் பெங்களூரு நகரில் பீக் அவர்களில் ஓலா ஊபர் ஆகியவற்றில் டிமாண்ட் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் தனக்கு வாடகை வாகனம் எதுவும் கிடைக்காததால் போர்ட்டர் செயலி வாயிலாக தன்னை தானே டெலிவரி செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். போர்ட்டர் என்பது குறிப்பிட்ட பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி ஆகும்.
பதிக் என்ற நபர் தான் என்ற நபர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "ஓலா, ஊபர் கிடைக்கவில்லை எனவே போர்ட்டர் ஆப் வாயிலாக என்னை நானே அலுவலகத்திற்கு டெலிவரி செய்து கொள்கிறேன்" என புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு ஒன்றரை லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர் .
பலரும் இவருடைய இந்த ஐடியாவை பாராட்டியுள்ளனர். ஒரு நபர் ஜீனியஸ் பெங்களூரு மொமென்ட் என குறிப்பிட்டுள்ளார். ஒரு பயனர் புதுமையான யோசனையாக இருக்கிறது பெங்களூர் வாசிகள் உங்களுக்கு ஓலா , ஊபர் கிடைக்கவில்லை என்றால் இந்த ஐடியாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஒரு நபர் பெங்களூரு வாசிகள் எப்பொழுதுமே என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள், இவருடைய இந்த ஐடியா ஏன் இத்தனை நாட்கள் எனக்கு தோணாமல் போய்விட்டது என கூறியுள்ளார்.
சில பயனாளர்கள் தாங்களும் இதுபோல போர்ட்டர் செயலி வாயிலாக அலுவலகத்திற்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பதாக பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு போர்ட்டர் நிறுவனமே எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது. பெங்களூரு பிரைன்வேவ் என பெருமிதத்தோடு இந்த பதிவினை போர்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கை உங்களுக்கு ஓலா அல்லது ஊபரை கொடுக்கிறது, ஆனால் உங்களுக்குள் இருக்கும் சூப்பர் ஹீரோ உங்களை போர்ட்டர் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது. நம்ம பெங்களூரு எப்பொழுதுமே கிரியேட்டிவிட்டிக்கு பெயர் போனது என போர்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications