இந்தியாவினை பொறுத்தவரையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு மேம்பட்டுள்ள துறைகளில் ஐடி துறையும் ஒன்று. இது இந்தியவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் ஐடி துறையினருக்கு மிக நல்ல காலமாகவே பார்க்கப்பட்டது.
ஏனெனில் கொரோனாவின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்தது. ஒரு வணிகத்தினை எப்படி நடத்துவது, தங்களது பொருட்களை எப்படி விற்பனை செய்வது? வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை எப்படி செய்வது?
இதற்காக ஊழியர்களை எப்படி இணைப்பது? என பலவற்றிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்தது.
டிஜிட்டல்மயமாக்கல் அதிகரிக்கலாம்
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா, மைக்ரோசாப்ட் ஃபியூச்சர் ரெடி விர்சுவல் மாநாட்டில், உலகம் மொபைல் மற்றும் கிளவுட் சகாப்தத்திலிருந்து, எங்கும் நிறைந்த கணினிமயமாக மாற்றம் கண்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இருந்த வளர்ச்சியினை விட, அடுத்த 10 ஆண்டுகளில் அதிக டிஜிட்டல்மயமாக்கல் இருக்கலாம் என நாதெல்லா சுட்டிக் காட்டினார்.
ஹைபிரிட் ஒர்க் மாடல்
உலகில் கம்ப்யூட்டிங் எம்பட் செய்யப்படுகிறது. புதிய புதிய ஆப்கள் புதிய அப்டேட்களுடன் மாறி வருகின்றன.
நாதெல்லாவின் கூற்றுப்படி, ஹைபிரிட் ஒர்க் மாடலானது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை வழங்கும். இது ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதிலும், ஊழியர்கள் நிறுவனத்தினை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஊழியர்கள் விரும்பும் ஹைபிரிட் மாடல்
2021ல் கணக்கிடப்பட்ட மைக்ரோசாப்ட் ஆய்வின் படி, 73% ஊழியர்கள் ஹைபிரிட் பணி கலாச்சாரத்தினை தான் விரும்புகிறார்கள். கொரோனாவின் வருகைக்கு பிறகு அலுவலகத்திற்கு திரும்ப வருவதை காலவரையின்றி ஒத்தி வைத்த நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் ஒன்றாகும். இதற்கிடையில் ஹைப்ரிட் கலாச்சாரத்தினை ஆதரிப்பதற்காக, டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதும் முக்கியம் என நாதெல்லா வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் வணிகம்
கார்ட்னரின் 2021 அறிக்கையின் படி, வாடிக்கையாளர் சேவை நிறுவனங்கள் 2025ம் ஆண்டளவில் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்காக சொந்த மொபைல் ஆப்பில் இருந்து செய்தி அனுப்புவது சிறந்த அனுபவமாக மாறும். ஒவ்வொரு வணிகமும் டிஜிட்டல் வணிகமாக மாறி வருகின்றது. ஆக டிஜிட்டல் திறனை வளர்ப்பது மிக முக்கியமானது.
சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு
அதோடு சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு என்பதை நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும். குழுவினை ஒருங்கிணைக்க உங்களிடம் ஒரு சிறந்த கருவி இருக்க வேண்டும் என நாதெல்லா கூறியுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் மாற்றத்திற்கு சைபர் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எதிர்காலத்தில் எந்தவொரு வணிகத்திலும் சைபர் தாக்குதலை எதிர்கொள்ளலாம் என நாதெல்லா கூறுகின்றார்.
நல்ல செய்தி
எது எப்படியோ? பெருகி வரும் ஐடி தேவையானது, எதிர்காலத்தில் ஐடி நிறுவனங்களுக்கு மேற்கொண்டு பல புதிய ஒப்பந்தங்களை கொடுக்கலாம். இதன் மூலம் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சாதகமானதாக இருக்கலாம். இதனால் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம். மொத்தத்தில் இது ஐடி துறையினருக்கு நல்ல செய்தியாக இருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications