உத்தராகண்ட்: எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தினால் அதன் முழு பலனையும் பெற முடியும். அப்படி ஒன்று தான் கிரெடிட் கார்டுகள். கிரெடிட் கார்டுகளை சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் மிகச்சிறந்த சலுகைகளை நாம் அனுபவிக்க முடியும் என்பதற்கு உதாரணமான ஒரு செய்தியை தான் நாம் பார்க்கப்போகிறோம்.
நம்மில் பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறோம் ஆனால் அதை கொண்டு பொருள் வாங்கி மீண்டும் அந்த பணத்தை திரும்ப செலுத்துவதில் மட்டுமே நமது கவனம் சென்று விடுகிறது. ஆனால் கிரெடிட் கார்டுகளுடன் பல்வேறு சலுகைகளும் நமக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் புனேவை சேர்ந்த ஒரு பட்டய கணக்காளர் தன்னுடைய கிரெடிட் கார்டு பாயிண்டுகளை பயன்படுத்தி 3 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறார்.

பிரீத்தி ஜெயின் என்பவர் பட்டயக் கணக்காளராக இருக்கிறார். இவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள Marriott resort என்ற ரிசார்ட்டில் மூன்று நாட்கள் அவர் தங்கி இருந்தாராம்.
அந்த மூன்று நாட்களுக்கான மொத்த செலவு 3 லட்சம் ரூபாய் ஆனால் அதற்காக அவர் ஒரு ரூபாயை கூட செலவிடவில்லை. தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்த ரிவார்டு பாயிண்டுகளை மட்டுமே பயன்படுத்தி அவர் இந்த விடுமுறையை கழித்துள்ளார்.
தன்னுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் கார்டில் 58,000 மெம்பர்ஷிப் ரிவார்ட் பாயிண்ட்களை வைத்திருந்தாராம். அதனைக் கொண்டு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவிட முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
எனவே அவர் இந்த பாயிண்டுகளை Marriott International's loyalty programme இன் கீழ் Marriott Bonvoy பாயிண்ட்டுகளாக மாற்றினாராம். அதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் Marriott நிறுவன ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் தங்கிக் கொள்ள முடியும்.
பணத்திற்கு பதிலாக இந்த பாயிண்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ப்ரீத்தி பதிவு செய்துள்ளார். இந்த ரிசார்ட்டில் வந்து தங்குவது என்றால் ஒரு நாளைக்கு 90,000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டுமாம். ஆனால் நான் என்னுடைய கிரெடிட் கார்ட் பாயிண்டுகளை பயன்படுத்தி மூன்று நாட்கள் இந்த புதிய அனுபவத்தை பெற்றிருக்கிறேன் என கூறியுள்ளார்.
விதவிதமான உணவு, நீச்சல் குளம் என பல்வேறு வசதிகள் இருக்கின்றன என அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் இதே போல மற்றொரு பட்டய கணக்காளர் கிரெடிட் கார்டு பாயிண்டுகளை பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்தினரை சுற்றுலா அழைத்து சென்றதை பதிவு செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications