தன்னை மேடம் என அழைக்காத ஊழியரை 100 முறை மன்னிப்பு எழுத வைத்த தலைமை செயல் அதிகாரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ரெடிட் தளத்தில் வெளியாகியுள்ள இந்த பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது.
ரெடிட் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில் தன்னுடைய நண்பர் நிறுவனத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது என கூறியுள்ளார். அதன்படி "என்னுடைய நண்பர் அலுவலகத்தில் அவருடைய சீனியருக்கு நிகழ்ந்த சம்பவத்தை கேட்டால் நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள் " எனக் கூறியிருக்கிறார். அந்த நண்பரின் அலுவலகத்தில் பணியாற்றும் சீனியர் நிலை ஊழியர் ஒருவர், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை எப்பொழுதும் பெயர் கொண்டுதான் அழைப்பாராம்.

ஓராண்டு காலமாகவே அவர் தலைமை செயல் அதிகாரியை பெயரிட்டு தான் அழைத்து பேசுவாராம் அதனை அனைவரும் சகஜமாக பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த தலைமை செயல் அதிகாரி திடீரென ஒரு நாள் என்னை மேடம் என அழைக்காததால் உங்களுக்கு தண்டனை தருகிறேன், எனக்கு நூறு முறை நான் உங்களை பெயரை கொண்டு இனி அழைக்க மாட்டேன் என எழுதும்படி கூறினாராம்.
ஓராண்டு காலமாக பெயரிட்டு அழைத்தபோது ஏற்றுக் கொண்ட அவர் திடீரென அதற்கு அவரை மன்னிப்பு கூறியது மட்டுமில்லாமல் அந்த ஊழியரிடம் அது குறித்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு கூறாமல் 100 முறை இவ்வாறு எழுதி நிறுவனத்தின் குரூப் மெசேஜில் அதனை பதிவிட வேண்டும் என நிர்பந்தம் செய்தாராம்.
இந்த தலைமை செயல் அதிகாரியின் நடவடிக்கை தொடர்பான இந்த பதிவு ரெடிட் தளத்தில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. பள்ளிகளில் கூட இப்படிப்பட்ட தண்டனைகள் வழங்கப்படுவதில்லை என பலரும் அந்த தலைமை செய்த அதிகாரியை சாடியுள்ளனர்.
அந்த சிஇஓ சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார், அவர் ஊழியரை அவமானப்படுத்தி விட்டார் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் இந்த நூறு முறை மன்னிப்பு எழுதியதற்கு பதில் ஒரு முறை நான் வேலையை விட்டு செல்கிறேன் என எழுதி இருக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
ஒரு பயனர் இந்த நிறுவனத்தை விட்டு செல்ல 100 காரணங்களை எழுதி அவரிடம் கொடுத்திருக்கலாம் அதுவே சிறந்த பதிலடியாக இருக்கும் என கூறியுள்ளார். நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் நிறுவனத்தின் தலைவர் இப்படியா நடந்து கொள்வார் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அது எந்த நிறுவனம், யார் அந்த சிஇஓ என்ற தகவல் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications